தாக்குதலின் தன்மை
இந்நோய் இளம் கன்றுகளை அழுகச் செய்துவிடும். அதிலிருந்து கெட்ட வாடை வீசும்.
கழுத்துப் பகுதி அழுகுவது இதன் ஆரம்ப அறிகுறி. தொடர்ந்து இலைகள் உலர்வதால் மரம் திடீரென காய்ந்து காட்சியளிக்கும்.
தண்டைப் பிரித்து இலேசாக இழுத்தால் தண்டு மட்டும் அழுகிய அடித்தண்டு பகுதியோடு, கையோடு வந்துவிடும். கிழுங்கு மட்டும் மண்ணில் இருக்கும்.
ரொபஸ்டா, கிரான்ட் நைன் மற்றும் தெல்ல சக்கராலி இரகங்கள் சாகுபடியில், இந்நோய்த் தாக்கம் அதிகரிக்கும் போது வெளித்தண்டு வெடித்துக் காணப்படும்.
தாக்கப்பட்ட பயிரை கழுத்துப் பகுதியில் வெட்டித் திறந்து பார்த்தால் மஞ்சள் முதல் செந்நிற அழுகல் காணப்படும்.
ஆரம்பத்தில் கார்டெக்ஸ் பகுதியில் அடர் பழுப்பு அல்லது மஞ்சள் நிற நீர் தோய்த்தது போன்று காணப்படும்
பின்பு அழுகல் கிழங்கின் நடுப்பகுதிக்குப் பரவி, தண்டின் குருத்துக்கும் பரவி அழுகிய பகுதிகள் அடர் நிற பஞ்சு போன்று உருவாகும்.
இந்த மென் அழுகல் விரல் வடிவில் முன்னும் பின்னும் நகர்ந்து திசுப் பகுதி வரை வளர்ந்து காணப்படும். அழுகிய பகுதியிலிருந்து துர்நாற்றம் வீசும்.
நோய்க் காரணியை கண்டறிதல்:
இந்த நோயினை உண்டாக்கும் நச்சுயிரியானது கிராம் நெகட்டிவ் வகையைச் சார்ந்த, சுற்றிலும் இழைகள் கொண்ட கண்ணாடித் தண்டு வடிவ பாக்டிரியம் ஆகும். இது தனியாகவோ, இரட்டை அல்லது கோர்வை அமைப்பில் குழுவாகவோ காணப்படும்.
மண்ணில் வாழும் பாக்டிரியா கிழங்கின் காய்கள், இலைப் பரப்பு மற்றும் கன்றுகளின் மூலமும் பரவுகின்றது.
பாதிக்கப்பட்ட மரத்தின் பகுதிகள்,காயங்கள் மூலம் மற்ற வாழைகளுக்குப் பரவுகின்றது. சற்று சூடான தட்பவெப்ப நிலை மற்றும் அதிக மழைப்பொழிவும் இந்நோய்த் தாக்கத்திற்கு வழிவகுக்கும். மண்ணிலிருக்கும் பாக்டிரியா பயிரில் ஊடுருவ நீர் தேவைப்படுகின்றது.
கட்டுப்பாடு
உழவியல் முறைகள்:
முறையான வடிகால் வசதி, மண்ணினைக் கிளறி காற்றோட்டத்துடன் இருக்குமாறு செய்தல் அவசியம்.
ஆரோக்கியமான கன்றுகளை, நோய்ப் பாதிப்பற்ற தோட்டத்திலிருந்து தேர்வு செய்து நடவேண்டும்.
நோய்த் தாக்கிய பயிர்களை உடனடியாக நீக்கிவிடவும்.
அறுவடை முடிந்தவுடன் பயிர் பாகங்களை அகற்றவும்.
சோயாபீன், தீவனப் பருப்பு வகைகள், சிறு தானியங்கள் போன்ற பாக்டிரிய அழுகல் நோயினால் பாதிக்கப்படாத பயிர்களுடன் பயிர் சுழற்சி செய்யலாம். வெங்காயம் மற்றும் காய்கறிப் பயிர்களுடன் வாழையைப் பயிரிடுதல் கூடாது.
நூற்புழுக்கள் மற்றும் பிற பாக்டீரியங்களைக் கடத்தும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துதல் அவசியம்.
நடுக்கணுக்கள் இறந்த, பக்கக் கணுக்கள் நன்கு வளரும் நிலையில் உள்ள கிழங்குகளை நடுவதால் இந்நோயினைத் தடுக்கலாம்.
மழைக் காலங்களில் பெரும் கன்றுகளை (500 கிராமிற்கு அதிகமான எடையுள்ள) நடுவதைத் தவிர்க்கவும்.
0 Comments
Smart vivasayi