எந்தெந்த பயிரில் என்ன ஊடுபயிர்?
சோளத்தில் ஊடுபயிர்கள்:
சோளத்துடன் அவரையை 4:1 என்ற விகிதத்தில் விதைத்து சோளத்தண்டு புழுவின் சேதத்தை யும், நிலக்கடலையுடன் கம்பு பயிரை 6:1 என்ற விகித்தில் விதைப்பதன் மூலம் சுருள் பூச்சியின் சேதத்தை குறைக்கலாம் .
கரும்பில் ஊடுபயிர்கள்:
கரும்பில் தக்கை பூண்டு ஊடுபயிராகப் பயிரிடுவதன் மூலம் கரும்பு தண்டு துளைப்பானை கட்டுப்படுத்தலாம்.
கரும்பு பயிரில் சோயாபீன்ஸை ஊடுபயிராக சாகுபடி செய்வதால் இரண்டிலும் லாபத்தை பெறலாம்.
கரும்பு பயிரில் வெங்காய பயிரை பயிரிட்டு இடைக்கணு புழு தாக்குதலை குறைத்து விடலாம்.
மக்காசோளத்தில் ஊடுபயிர்கள்:
மக்காசோளத்தில் ஊடுபயிராக ஆமணக்கு பயிரிடுவதால் மூலம் புரோடீனியா புழுக்களை கட்டுப்படுத்த முடியும்.
மக்காசோளத்தில் ஊடுபயிராக சோளம் பயிரிடுவதால் குருத்து ஈ மற்றும் தண்டு துளப்பனின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தலாம்.
மக்காச்சோளத்துடன் உளுந்து ,பச்சை பயிறு,தட்டை பயிறு ,சோயாமொச்சை போன்ற பயிறுவகைப் பயிர்களை ஊடுபயிராக மானாவாரி நிலங்களில் பயிரிடலாம்.
வெங்காயத்தில் ஊடுபயிர்கள்:
வெங்காயத்தை தாக்கும் வெட்டுப்புழுக்களை கட்டுப்படுத்த வரப்பு ஓரங்களில் ஆமணக்கை கவர்ச்சி பயிராக பயிரிட்டு அதில் காணப்படும் முட்டை குவியல்களை இளம் புழுக்களை சேகரித்து அழிக்கலாம் .
வெங்காயம் பார்பிடித்து கரை மேலே 2 அல்லது 3 வரிசையாக நடப்படுகிறது.இதன் வரப்பை சுற்றிலும் சூரிய காந்தி பயிரை நடவு செய்யலாம். தென்னையில் ஊடுபயிர்:
தென்னந்தோப்பில் பாக்குமரம் ,ஜாதிக்காய் ,மஞ்சள் மிளகு கோக்கோ,தட்டைப்பயிறு, கொள்ளு, உளுந்து ,வாழை ,சோளம் ஆகிய பயிர்களை ஊடுபயிர்களாக நடவு செய்யலாம்.இதனால் தென்னைக்கு நீர்ப்பாசனம் கிடைக்கும்போதே அருகில் நடப்பட்டுள்ள மற்ற பயிர்களுக்கும் பாசனம் கிடக்கிறது.
தென்னந்தோப்பில் பொதுவாக தென்னையின் வயது, உயரம் மற்றும் வெயிலின் ஊடுருவலை வைத்து பலவகையான பயிர்கள் ஊடுபயிர்களாக நடவு செய்யலாம்.
மஞ்சளில் ஊடுபயிர் :
மஞ்சள் நடவு செய்யப்பட்ட பாரின் மறுபக்கம் ஊடுபயிர்களை வரிசையாக நடவு செய்யலாம் .உளுந்து,பாசி பயறு , வெங்காயம்,ஆமணக்கு ஆகியவற்றை பயிரிடலாம். வெங்காயம் ஊடுபயிராக செய்யவதன் மூலம் மஞ்சளின் மகசூல் அதிகரிக்கும்.
மிளகாயில் ஊடுபயிர் :
மிளகாய் சாகுபடியான கரிசல் மண் பகுதிகளில் கொத்தமல்லி விதைக்கலாம்.மேலும் கீரைகளையும் விதைத்து இரட்டிப்பு லாபம் பெறலாம்.
பார் முறையில் மிளகாய் நாற்று நட்டால் ,பாரின் ஒரு புறம் மிளகாய் நாற்று ,மறுபுறம் வெங்காயம், முள்ளங்கி பயிர்களை நடலாம். ஊடுபயிர்களின் அறுவடை முடிந்ததும் களை வெட்டி மிளகாய் செடிக்கு மண் அணைக்கலாம் .கொய்யாவில் ஊடுபயிர்கள்:
பயறு வகை பயிர்களான பச்சை பயிர் ,உளுந்து,தக்காளி ,மற்றும் பீட்ரூட் ஊடுபயிர்களாக தொடக்க காலகட்டங்களில் பயிரிடுவதன் மூலம் அதிக வருமானம் பெறலாம்.
மேலும் சாம்பல் பூசணி ,வெள்ளரி,அன்னாசி ,பீன்ஸ் ,முட்டைகோஸ் போன்ற பயிர்களை ஊடுபயிர்களாக பயிரிடலாம்.
வாழையில் ஊடுபயிர்கள்:
வாழையின் ஆரம்பகால வளர்ச்சி நிலையில் ஊடுபயிரிடுவது எளிது. முள்ளங்கி ,காலிஃபிளவர்,முட்டைகோஸ் ,மிளகாய்,கத்தரி,கருணை கிழங்கு, சேனைக்கிழங்கு ,வெண்டை ,கீரை ,பூசணி வகைகள் ,நிலக்கடலை செண்டு மல்லி போன்றவை ஊடுபயிராக வாழையுடன் வளர்க்கப்படுகின்றன.
நமது தமிழகத்தில் பாக்கு,தென்னை மரங்களுடன் வாழை பல பயிர் சாகுபடி முறையும் உள்ளது.
தனியே வாழை பயிரிடுவதை விட வெண்டையுடன் சேர்த்து பயிரிடுவது மிக அதிக இலாபத்தையும், வெண்டையை தொடர்ந்து ,கொத்தவரை ,அவரை போன்றவை நல்ல இலாபம் தரும் ஊடுபயிர்களாகும்.
தக்காளியில் ஊடுபயிர்கள்:
தக்காளியில் ஊடுபயிராக வெங்காயம் பயிரிடுவதால் மூலம் தக்காளியைத் தாக்கும் வெள்ளை ஈக்களை முற்றிலும் கட்டுப்படுத்தி விடலாம்.
மேலும் தக்காளியில் ஊடுபயிராக துவரையை வித்தும் அதிக மகசூல் பெறலாம்.
🌾கேழ்வரகில் ஊடுபயிர்கள்:
கேழ்வரகு பயிரில் இறவை காலங்களில் ஊடுபயிர்களாக வெங்காயம் பயிரிட்டு நல்ல மகசூலை பெறலாம்.
மேலும் மானாவாரி காலங்களில் பச்சைப்பயிறு சாகுபடி செய்து நல்ல மகசூலை பெறலாம்.
எள்ளில் ஊடுபயிர்கள்:
எள்ளில் ஊடுபயிராக பச்சைப்பயறு சாகுபடி செய்து நல்ல மகசூல் பெறலாம்
இதை தொடர்ந்து கோதுமை பயிரை விதைத்து வந்தால் அதிக மகசூலை பெறலாம்.
வெண்டையில் ஊடுபயிர்கள்:
வெண்டை செடிகள் அதிக அளவு உஷ்ணத்தால் அடிபடாமல் இருக்க வெண்டை செடிகளை சுற்றிலும் கொத்தவரை செடிகளை வளர்க்கலாம்.
பந்தல் காய்கறி பயிரிகளான பாகல் ,புடலையில் ஊடுபயிர்:
பந்தல் வகை காய்கறி பயிர்களில் ஊடுபயிராக முள்ளங்கி,கீரை வகைகள் அதிகளவில் பயிரிட்டு நல்ல மகசூலை பெறலாம்.
மலர்கள் சாகுபடியில் ஊடுபயிர்கள்:
மலர்கள் சாகுபடியில் ஊடுபயிராக கீரை,மூலிகை பயிர்கள்,காய்கறிகள் போன்றவற்றை பயிரிட்டு நல்ல மகசூலைப் பெறலாம்.
மல்லிகையில் ஊடுபயிர்கள்:
மல்லிகையில் ஊடுபயிராக மூலிகை பயிர்,தர்பூசணி சாகுபடி செய்து நல்ல முறையில் லாபத்தையும்,அதிக மகசூலையும் பெறலாம்.
மரவள்ளி கிழங்கில் ஊடுபயிர்:
மரவள்ளி கிழங்கில் ஊடுபயிராக வரப்பு ஓரங்களில் ஆமணக்கு,துவரை ஆகியவற்றை பயிர் செய்யலாம்.
செவந்தியில் ஊடுபயிர்கள்:
சித்திரையில் விதைப்பவர்கள் ஊடுபயிராக வெங்காயத்தையும் சேர்த்து விதைப்பார்கள்.ஒரு வரிசையில் செவ்வந்தி,அடுத்த வரிசையில் வெங்காயம் என விதைத்து 45ம் நாளில் வெங்காயம் அறுவடை ஆகிவிடும்.
பாக்கு ஊடுபயிர்:
மிளகு,கோகோ ,பட்டை,கிராம்பு மற்றும் எலுமிச்சை
0 Comments
Smart vivasayi