Rabbit breeding விவசாய உபதொழில்களில் முக்கியமானது கால்நடை வளர்ப்பு. ஆடு, மாடு, கோழி, பன்றி என கால்நடைகளை வளர்த்து லாபம் பார்த்து வரும் விவசாயிகள் அநேகம் பேர் உள ்ளனர். அவற்றில் குறைந்த முதலீட்டில் லாபம் கொடுக்கும் பண்ணைத் தொழிலில் முயல் வளர்ப்பும் அடங்கும். குறைந்த இடமே போதும்! “முயல் வளர்ப்புக்கு பெரியளவுல இடம் தேவையில்லை. அதிக நேரம் செலவழிக்க வேண்டியதும் இல்லை. முதலீடும் குறைவுதான். வீட்டுல கொஞ்சம் இடம் இருந்தாலே போதும். அதுல முயல வளர்த்து நல்ல லாபம் எடுக்க முடியும். காலையில் பசுந்தீவனம், மாலையில் அடர்தீவனம்! காலையிலும், மாலையிலும் முயலுக்கு உணவு கொடுத்தால் போதுமானது. காலை 10 மணியளவில்... முட்டைகோஸ் தோல், கேரட் இலை, நூக்கல், ஆலமர இலை, வேலிக்காத்தான் இலை, வாழை இலை, முள்ளங்கி இலை, அகத்திக்கீரை, வேலிமசால்.... என கிடைக்கும் பசுந்தீதீவனத்தைக் கொடுக்கலாம். ஒரு முயலுக்கு ஒரு கைப்பிடி அளவு கொடுத்தால் போதுமானது. தினமும் ஒரே இலையைக் கொடுக்காமல் மாற்றி மாற்றிக் கொடுப்பது நல்லது. கம்பு 30 கிலோ, மக்காச்சோளம் 30 கிலோ, மிருதுவான கோதுமைத் தவிடு 25 கிலோ, கடலைப் பிண்ணாக்கு 13 கிலோ, தாது உப்பு 1.5 கிலோ...