பூ பூக்கும் மா மரங்கள் பராமரித்தல் அவசியம்.
மாசாகுபடியாளர்கள் பலர் தோட்டத்தை குத்தகைக்கு விடுவதும், அதன்மூலம் ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் ரூபாய் வந்தால் போதும் என்ற மன நிலையில் இருப்பது தவறு. மா மரங்கள் ஒவ்வொன்றும் வரிசையாக எண்கள் இட்டு முறையாகப் பராமரித்தால் 160 ஆண்டுகள் கூட நல்ல வருமானம் தரக்கூடிய அற்புதமான விவசாய தொழிலாகும். மா மரங்கள் ஒரே நேரத்தில் பூத்து ஒரே நேரத்தில் காய்ப்பது அரிது.
தனித்தனியே உற்று நோக்கினால் பல வகை, பல ரக மா வகைகளில் பூக்கும் தன்மை வேறுபடுகிறது. பெண் பூக்கள் தன்மையும், பூச்சி நோய் தாக்குதலை தாங்கி வளரும்தன்மையும்கூட ஒரே மாதிரி இருக்காது. நல்ல சூழலில் பூத்த மாமரம், அதிக காய்கள் பிடித்திட பூச்சி தாக்குதல் துவங்கும் போதே பயிர் பாதுகாப்பு மருந்துகள் முறையாக, சரியான அளவு பயன்படுத்தி பூத்த மரங்கள் காய்ப்பிடித்த மரங்களாக மாற்றப்பட வேண்டும். ஒரு மரத்தில் ஆயிரம் பூக்கள் இருப்பின் ஒன்று அல்லது அரை சதவீதம் தான் பிஞ்சு விட வாய்ப்பு இயற்கையாகவே உள்ளது.
மாந்தோப்பில் தேனீக்கள் நன்மை செய்பவை. இளம் பருவத்தில் உள்ள மரங்கள் குறைந்த அளவு காய்கள் கொண்டு இருந்தாலும் அறுவடை செய்யும் தருணம் மரம் வாரி கணக்கிட்ட பதிவேடு மூலம் நீடித்து நிலையான வரவு வந்துள்ளதா என்பதை எளிதில் அறியலாம். குத்தகைக்கு விட்ட தோப்பில் பலவித மருந்து தெளிப்பதால் பயன் அதிகம் வராது. வெகு வேகமாக கனமான மருந்து கலவையை கண்டபடி தெளித்தால் காற்று தான் மாசுபடும். நன்மை செய்யும் எல்லா உயிரினமும் அழியும். இதுவே மகசூலை பெற இயலாத சூழல் உருவாக்காது.
முறையான கவாத்து செய்தாலே தத்துப்பூச்சிகள் வெகுவாக வராது தடுக்கலாம். காய்களே பிடிக்காத தருணம், ஆப் சீசன் எனப்படும் தருணம் கூட தத்துப்பூச்சிகளை கட்டுப்படுத்திட மருந்து தேவைப்படும். அங்காடிகளில் கிடைக்கும் ரசாயனங்களை விட வேப்பம் எண்ணெயை ஒரு லிட்டர் நீரில் 5 மில்லி வீதம் தெளித்தால் போதும். தேனீக்கள் சாகாது. நன்மை செய்யும் பூச்சிகள் காக்கப்படும். உயிரியல் கட்டுப்பாட்டு உத்தியான பவேரியா அல்லது மெட்பிரைசம் உதவும். பூத்த தருணம் ஒரு முறையும், 7 வது நாள் கழித்து மறு முறையும் மருந்து தேவை.
Comments
Post a Comment
Smart vivasayi