குறிப்பு
Form
I A1, Form I A2, Form I A3, Form I A4 இவை அனைத்திலிலும்
உள்ள கேள்விகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் ஒரு சில கேள்விகள்
மட்டுமே வேறுபட்டு இருக்கும். அந்த வேறுபட்ட கேள்விகளுக்கு மட்டுமே இங்கே
குறிப்பிட்டுளேன்.
FORM – I A2
FORM – I A2 இந்த பார்ம் நீங்கள்
ஒரு குழுவாக சேர்ந்து இயற்கை விவசாயம் செய்ய விரும்பினால் இந்த விண்ணப்பத்தை
பூர்த்தி பூர்த்தி செய்து கொடுக்க
வேண்டும். Form 1A உள்ள கேள்விகள்தான் இதிலும் இருக்கும் . ஒருசில
கேள்விகள் மட்டுமே மாறுபடும் அதை பற்றி பார்ப்போம் .
1) உங்களுடைய குழு அல்லது யுனிட் இல்ல
சொசைட்டியின் பெயர் மற்றும் முகவரியை கொடுக்கவேண்டும்.
2)
நீங்கள் ஒரு குழுவாக இருப்பதால் யாரிடம் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை
தெரிவிக்க வேண்டும் அந்த நபரின் பெயர் மற்றும் போன் நம்பர் தரவேண்டும்.
5) இந்த கேள்வியில்
உங்கள் குழு பற்றிய சுருக்கமான தகவல்கள் சொல்ல வேண்டும்
* உங்கள் இடத்தின் பெயர்
* மொத்த குழு
உறுப்பினர்களின் எண்ணிக்கை
* உங்களுடைய குழுக்களின் இயற்கை வேளாண்மை செய்யும் மொத்த பரப்பளவு
(ஏக்கரில்)சொல்ல வேண்டும்.
* ஒவ்வொரு குழு உறுப்பினரின் வேளாண்மை செய்யும் பரப்பளவு குறிப்பிட வேண்டும் .
8)
குழு உறுப்பினர்களின் விவரங்கள்
அணைத்து விவசாயிகளின் பெயர் மற்றும் முகவரி
* சொந்த நிலமா அல்லது
குத்தகை நிலமா குறிப்பிட வேண்டும்
டெக்கலராய்சன்
பார்ம் ( DECLARATION FORM )
உங்களுடைய பார்ம் சமர்ப்பிக்கும்போது கீழ் உள்ளவற்றை
சேர்த்து கொடுக்கவேண்டும்.
1) உங்களுடைய குழுவின் இயற்கை விவசாயம் செய்யும் நிலத்தின் இருப்பிட வரைபடம்
2) உள் தர அமைப்பு
கையேடு.(Internal Quality System Manual)
3) உள் பொது தரநிலை
கையேடு (Internal General Standards Manual)
4) TNOCD ஒப்பந்தம்
5) உங்கள் குழுவின் சட்ட ஆவணங்கள் (உங்களுடைய குழுவின் பதிவு ஆவணத்தை
சமர்ப்பிக்கலாம்)
இவை அனைத்தையும் ஒரு கவரில் போட்டு சமர்ப்பிக்க
வேண்டும்.
ஃபார்ம் I A 3
நீங்கள் ஒரு கார்பரேட்டாகவோ இல்லை பிசினஸ் செய்து
சொந்த நிலம் வைத்து இருந்தால் ஃபார்ம் I A 3யை பயன்படுத்தலாம் ஃபார்ம்- I A 1 க்கும் ஃபார்ம் FORM – I
A3க்கும் இரண்டு கேள்விதான் வித்தியாசம் இருக்கும் .
1) உங்களுடைய பெயர் மற்றும் கம்பெனி விலாசம் எழுத வேண்டும் .
டெக்கலராய்சன்
பார்ம் ( DECLARATION FORM )
7) உங்கள் நிறுவனத்தின்
பதிவு செய்யப்பட்ட நகல் (உங்களுடைய கம்பெனிய பதிவு பன்னிருப்பிங்க அந்த நகல் )
இவை அனைத்தையும் ஒரு
கவரில் போட்டு சமர்ப்பிக்க வேண்டும்.
ஃபார்ம் I A 4
நீங்கள் ஒரு கார்பரேட்டாகவோ இல்லை பிசினஸ் செய்து
சொந்த நிலம் இல்லாமல் விவசாயிகளிடம் ஒப்பந்தம் செய்து இருந்தால் ஃபார்ம் I A 4யை பயன்படுத்தலாம் ஃபார்ம்- I A 3 க்கும் ஃபார்ம் FORM – I
A4க்கும் சில கேள்விதான் வித்தியாசம் இருக்கும்
டெக்கலராய்சன் பார்ம் ( DECLARATION FORM )
1) நீங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்ட விவசாயிகளின் நில வரைபடம்
2) நீங்கள் விவசாயிகளிடம்
ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் நகல்
இவை அனைத்தையும் ஒரு கவரில் போட்டு சமர்ப்பிக்க
வேண்டும். இதுவரை இயற்கை விவசாயம் செய்வதற்கான விண்ணப்பம் அதன் வகைகள் மற்றும் பதிவு செய்ய என்ன ஆவணங்கள் தேவை என்பதை
பார்த்தோம். அடுத்ததாக பண்ணைக்கு வெளியிலிருந்து பெறப்படும் இடுபொருட்களுக்கான
முன் அனுமதி பற்றி பார்ப்போம் .
0 Comments
Smart vivasayi