பதில் - 1
ரோட்டவேட்டர் போட்டு இரண்டு மூன்று முறை வெட்டி விடலாம்
பதில் - 2
உரத்தை நிலம் முழுக்க தூவினால் தொழுஉரத்திலுள்ள விதைகள் நன்கு முளைத்து வரும்.
இதற்கு பதிலாக உரத்தை நீர்பாசனம் செய்யும் ஓரு பாரை இரு பக்கமும் வாய்க்காலை அடைத்து பார முழுதும் தொழு உரமிடலாம், இதை ஓரு பார் விட்டு ஓரு பாரில் செய்யலாம், அப்போது ஓரு வாய்க்காலில் நீரும் அடுத்தவாய்க்காலில் உரமும் இருக்கும்.
உரத்தை நிலத்திற்கு மேலேயே போட வேண்டும், நீண்ட நாட்களுக்கு பலன் கொடுக்கும்.
மண்ணிலிட்டு உழுதால் மண்ணோடு மண்ணாக சீக்கிரம் மக்கி விடும், பயீரை விட களைகளுக்கே உரம் பயனளிக்கும்.
தற்போது தற்காலிக தீர்வாக ஒரு முறை உழவு செய்யவும், சிறிது நீர் பாய்ச்சி களைகள் வளர விட்டு மீண்டும் ஓருமுறை உழவு செய்யவும், பின்பு பார் அமைத்து பயிர் செய்யலாம்.

பதில் - 3
ரோட்டோவேட்டர் பயன்படுத்தியபின் சணப்பு பயிரட்டபின் மீண்டும் ரோட்டோவேட்டர் ஓட்டியபின் வெங்காயம் பயிரிடலாம்.
பதில் - 4
டிராக்டர் மூலம் டிஸ்க் எனும் ஜட்டி கலப்பைகொண்டு உழவுசெய்து கோரை,அறுகம்புல் கிழங்குகள் காய்ந்தபின் பயிர் செய்யலாம்.
பதில் - 5
கொள்தான் சிறந்த தீர்வு ... அடர்தியாக கொள்விதையுங்கள் , நன்கு வளர்ந்து பூ எடுத்ததும் மடக்கி உழுது விடுங்கள் ,மறுபடியும் கொள் அடர்த்தியாக விதைத்து மடக்கி ஓட்டுங்கள் இது தான் சிறந்த தீர்வு , இல்லை என்றால் களைகொள்ளிதான் , மிக்சர் போன்ற ஒரு களைகொள்ளி கொடுப்பார்கள் அருகு கோரைக்கு இதை அடித்தபின் பெரிய கலப்பை போட்டு ஓட்டி விடுங்கள் மீண்டும் ஒரு முறை அதே மருந்தை அடிக்கவேண்டும் ஆனால் அதன்பின் இரண்டுமாதம் வெள்ளாமை செய்ய வேண்டாம் ,செய்தால் பயிர் நன்றாக வராது ...
Comments
Post a Comment
Smart vivasayi