தென்னை மரங்களில் குரும்பை உதிர்வதை தவிர்க்க🌴
உடனடியாக தர வேண்டுமென்றால் தரையில் கொடுக்கும் வகையிலான போரான்
100 கிராம் வாங்கி 5 கிலோ தொழு உரத்துடன் கலந்து தூரிலிருந்து நான்கடி தள்ளி மண்ணைத் தோண்டி உள்ளே போட்டு மூடி தண்ணீர் கொடுக்கவும். இது போல் 5 மாதங்கள் பண்ணலாம். தரையில் கொடுக்கும் அதே நேரத்தில் மரத்தின் மேல்பகுதியில் தெளிக்கும் வகையிலான போரான் வாங்கி ஒரு லிட்டருக்கு ஒரு கிராம் என கலந்து தெளிக்கலாம்.
🌴நீண்டகால நிலையான இயற்கைவழி தீர்வாக🌴 200 லிட்டர் டிரம்மில் உள்ள நீரில் 10 கிலோ அளவுள்ள பால் வரும் எருக்கின் இலை பூ தண்டு காய் நறுக்கி உள்ளே போட்டு மூடி 5 நாள் ஊறவைத்து அந்த தண்ணீரை 5 நாள் கழித்து மரத்திற்கு 5 லிட்டர் என தரையில் ஊற்றலாம். அதே நேரத்தில் அந்தக் கரைசலை அப்படியே ஊற்றி மரத்தின் மேல்பகுதியில் உள்ள குரும்பைகள் மேல் தெளிக்கலாம.
இதனை 15 நாட்களுக்கு ஒரு முறை செய்யவும்.
முதல் ஒரு மாதம் மட்டும் கடையில் வாங்கும் போரானை உபயோகப்படுத்தலாம். மற்றபடி இயற்கை வழி தீர்வு நீண்ட நல்ல பலன்தரும் .மரத்தின் ஆயுளையும் பாதுகாக்கும்.
Comments
Post a Comment
Smart vivasayi