இரட்டை வரப்பு பாசனமுறை
மரத்தின் தண்டில் இருந்து 4 அடி இடைவெளியில் ஒரு வட்ட வடிவ வரப்பும் 6 அடி இடைவெளியில் இன்னொரு வட்ட வரப்பும் போட்டு இரண்டுக்கும் நடுவில் ஒரு அடி தோண்டி அதில் நாங்கள் தயாரிக்கும் தென்னை சிறப்பு இயற்கை உரம் 15 கிலோ இட்டு மண் மூடி அதன் மேல் தக்கைப்பூண்டு விதை 200 கிராம் போட வேண்டும். இந்த பயிர் வளராந்து 50 நாளில் மிதித்து விட்டு மண் மூட வேண்டும்.
இதன் பயன்பாடு
1, மண்ணில் உறிஞ்சும் வேர்கள் உள்ள இடத்தில் பாசனம் செய்வதால் பாசன நீர் வீணாகாமல் பயன் தரும்
2, நீர் சேமிப்பு
3, மரத்தின் தண்டை ஒட்டி புது வேர்கள் மண்ணிற்கு மேல் பரவாமல் அது சரியாகும்
4, ஊட்டச்சத்து அறைகளை நோக்கி வேர்கள் வளரும்
5, பாசன நீரில் உள்ள உப்பு குறையும். உப்பு இரண்டு வரப்புகளில் உள்ள காற்றோட்டத்தால் உப்பு வெளியே படியும்
6, இரண்டு வரபபுகளுக்கு இடைப்பட்ட பகுதி மிதிபடாமல் இருப்பதால். நிலக்தாற்றோட்டம். அதிகமாகும். இந்த நிலக்காற்றோட்டம். வேர்கள் சத்துக்களை உறிஞ்சி எடுக்க உதவும்
7. சுற்றுவட்ட நீர் பாதையில் உள்ள அனைத்து வேர்களும் தூண்டப்பட்டு வேலை செய்யும்
8, நிறைய சல்லி வேர்கள் தோன்றும்.
9. உச்சி வெயிலில் மரத்தின் நிழல் விழும் இடம் முழு வட்ட வடிவில் இருக்கும். அதுவே மரத்தின் வாழிடம் ஆகும். ( ஒரு மரத்திற்கு தேவையான இடவசதி) Canopy area. இந்த இடங்களில் வேர் பரவி மரம் அதிக உற்பத்தி தரும்
Comments
Post a Comment
Smart vivasayi