Ad Code

ஊடுபயிர்-1 - ஊடுபயிர் என்றால் என்ன

Intercropping






ஊடுபயிர்


ஊடுபயிர் என்பது விவசாயம் செய்தலில் முதன்மைப்பயிரின் இடையேயுள்ள இடத்தில குறிகிய காலப்பயிராக சாகுபடி செய்யும் முறைக்கு ஊடுபயிர் சாகுபடி என்று பெயர். ஊடுபயிர் சாகுபடி என்பது குறுகிய காலத்தில் வருமானம் எடுக்கின்ற ஒரு யுக்தி. ஊடுபயிர் பிரதான பயிருக்குத் துணைபோகும் தவிர பயிரின் விளைச்சலை கெடுக்காது .தனிப்பயிருக்குள் பயிரிடப்படும் பயிர்களை எல்லாம் ஊடுபயிர் என்று அழைக்கிறோம்.


உதாரணம் கடலைக்குள் துவரை ,தென்னைக்குள் உளுந்து,வாழை.
ஊடுபயிரின் நன்மைகள்
ஊடுபயிர் ஓன்று இல்லாமல் போயிருந்தால் பெரும்பாலான விவசாயிகளுக்கு அடுத்த வேலை என்பது இல்லாமல் போயிருக்கும்.
வறட்சி,ஆள்பற்றாக்குறை ,நோய் தாக்குதல் ,விலையின்மை என ஆயிரத்தெட்டு காரணங்களால் சவால்களை சந்தித்தபடி விவசாயம் செய்து வரும் வேளாண்குடிகளை நம்பிக்கையோடு வைத்திருப்பதே இந்த ஊடுபயிர் தான்.இந்த முறையில் தனிப்பயிர் சாகுபடியை விட குறிப்பிட்ட நிலத்தில் ,குறிப்பிட்ட காலத்தில் கூடுதல் வருவாய் பெறலாம்.நிலப்பரப்பு,நீர்,உரம் ஆகிய அனைத்தும் வீணாக்காமல் சீராக பயன்படுத்தலாம்.
இதனால் களை செடிகளும் குறைகிறது.ஊடுபயிர் சாகுபடியினால் குறைந்த இடத்தில கூடுதல் வருவாய் கிடைக்கிறது.


ஊடுபயிரின் வகைகள்:



1. கலப்பு பயிர்
2. வேலிப்பயிர்
3. வரப்புப்பயிர்
4.வாய்க்கால் பயிர்


1. கலப்பு பயிர்


ஊடுபயிரானது மிக குறைந்த விகிதத்தில் இல்லாமல் எண்ணிக்கையிலும் வயதிலும் சரிக்கு சரியாக நின்று மகசூல் கொடுத்தால் கலப்பு பயிர் எனப்படும்.
உதாரணம் துவரைக்குள் ஆமணக்கு,சோளத்தில் மொச்சை


2. வேலிப்பயிர்


தனிப்பயிர்களை சுற்றிலும் வேலியாகவும் அரணாகவும் நின்று காற்றை தடுக்கவும் காவல் காக்கவும் உதவி செய்யும் பயிர் வேலிப்பயிர் எனப்படும்.
உதாரணம் பருத்தியை சுற்றி புளிச்சக்கீரை,மாந்தோட்டத்தை சுற்றி சவுக்கு.


3. வரப்புப் பயிர்


பயிரை சுற்றிய வரப்புகளில் வளர்க்கப்படும் பயிருக்கு வரப்பு பயிர் என்று பெயர்.இதனால் நன்மை செய்யும் பூச்சிகள் பெருகும்.தீமை செய்யும் பூச்சிகள் குறையும்.கூடுதல் வருவாயும் கிடைக்கும்.
உதாரணம் நெல் வரப்புகளில் காராமணி, உளுந்து, பச்சைப்பயிறு , வெங்காய வரப்பில் சூரியகாந்தி.


4.வாய்க்கால் பயிர்


வாய்க்கால் கரைகளில் வரிசையாக வளர்க்கப்படும் பயிருக்கு வாய்க்கால் பயிர் என்று பெயர்
.உதாரணம் கடலை வாய்க்காலில் சூரியகாந்தி,மிளகாய் வாய்க்காலில் அகத்தி .
ஊடுபயிர் எப்படி இருக்க வேண்டும்.
முக்கிய பயிரை விட ஊடுபயிருக்கு வயது குறைவாக இருக்க வேண்டும்.
முக்கிய பயிருக்கு வழங்கப்படும் நீர்,உரம்,சூர்ய ஒளியின் அளவை ஊடுபயிர் அபகரித்து கொள்ள கூடாது . முக்கிய பயிருக்கு போட்டிக்கிவிடக்கூடாது.
ஊடுபயிரானது முக்கிய பயிரின் மொத்த எண்ணிக்கையையோ, மகசூல் திறனையோ குறைத்து விடக்கூடாது.மாறாக,மகசூல் கூட்ட வேண்டும் .மண்ணுக்கும் வளம் சேர்க்க வேண்டும்.
ஊடுபயிரினால் முக்கிய பயிருக்கு பூச்சி,நோய் தாக்குதல் ஏற்படக்கூடாது .பூச்சி,நோய்களை கட்டுப்படுத்தும் திறன் ஊடுபயிருக்கு இருந்தால் ரொம்ப நல்லது.


அவரவர்களுடைய மண் வளத்திற்கும், அந்தந்த படத்திற்கும் ஏற்ற பயிராக இருக்க வேண்டும்.
முக்கியமாக அப்பகுதியில் நன்றாக விற்கக் கூடியதாகவும், அதிக வருமானம் தருகின்ற பயிராகவும் இருக்க வேண்டும்.
ஊடுபயிர் களைகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதோடு, களையெடுக்கும் செலவையும் மிச்சப்படுத்திக்கிறது .அதிக மகசூல் தரும் ரகமாக இருக்க வேண்டும்.
அறுவடைக்குப் பின் மண் வளத்தை அதிகாரிகரிக்கும் பசுந்தாள் உரமாக பயன்படும் வகையில் அதிக பட்ச தழைகளை கொண்டிருப்பது சிறப்பானது.
மண் வளத்தை அதிகரிக்கும் நன்மை தரும் பாக்டீரியா ,நுண்ணுயிர்களை ஊக்குவிக்கும் பயிர்களான பயறு வகைகளைத் தேர்வு செய்யலாம்.


ஊடுபயிர் தேர்வு


ஊடுபயிரை தேர்வு செய்யம் பொது பயிரிடப்படும் பகுதி, பருவம்,மண் வகைக்கு ஏற்றவாரு தேர்வு செய்ய வேண்டும்.குறிகிய காலப் பயிராக இருக்க வேண்டும்.
வேகமாக வளர்ச்சியடையாததாகவும் குட்டையானதாகவும் இருக்க வேண்டும்.
குறைந்த அளவு தண்ணீர் தேவை உடையதாக இருக்க வேண்டும்.
அதிக மகசூல் தரும் ரகமாக இருக்க வேண்டும். மண் வளத்தை அதிகரிக்கும் நன்மை தரும் பாக்டீரியா ,நுண்ணுயிர்களை ஊக்குவிக்கும் பயிர்களான பயறு வகைகளை தேர்வு செய்யலாம்.


ஊடுபயிர் அறுவடை


ஊடுபயிர்கள் முற்றியதும் அறுவடை செய்ய வேண்டும். குறைந்த காலப் பயிர்களை விதைத்து எளிதில் அறுவடை செய்து முடித்து விடலாம்.
ஊடுபயிர் களைகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதோடு, களையெடுக்கும் செலவையும் மிச்சப்படுத்துகிறது.
அதுமட்டுமல்லாமல் ஒரே நேரத்தில் இரட்டிப்பு லாபத்தையும் பெறலாம்,மேலும் ஊடுபயிரை சரியான தருணங்களில் அறுவடை செய்து விற்பனை செய்து அதிக லாபம் பெறலாம்.


Post a Comment

0 Comments