விவசாய படிப்புகள்
உழவன் இன்றி இயங்காது உலகு
பலவிதமான இளங்கலை படிப்புகள் உள்ளன தமிழ்நாட்டில் ஏன்
இந்தியா , உலகம்
முழுமைக்கும் கூட , மருத்துவம்
சார்ந்த , கட்டிடக்கலை
, கம்ப்யூட்டர்
டெக்னாலஜி தொழில் துறை சம்பந்தப்பட்ட
படிப்புகள் , இருக்கும் பொழுது நாம் ஏன் விவசாய படிப்புகளை நாம்
தேர்ந்து எடுக்க வேண்டும் ? ஏன்
விவசாய படிப்புகளை தேர்ந்து எடுக்கணும் கொஞ்சம் புரியும்படி சொல்லணுமுன்னா தேவை ,அவசிய தேவை , அத்தியாவசிய தேவை. என மூன்று
வார்த்தையில் சொல்லிவிடலாம் . தேவை என்பது , போன் , டிவி, கம்ப்யூட்டர் ,
AC போன்றவற்றை சொல்லலாம் இவை இருந்தாலும் இருக்கலாம்
இல்லாமலும் நாம் வாழ முடியும். அவசிய தேவை என்று பார்த்தால் வீடு , மருத்துவம் போன்றவை . ஏன் மருத்துவம் கூட நாம் தேவை
பட்டால் மட்டுமே போகப்போகிறோம் . ஆனால் நாம் உண்ணும் உணவு என்பது அத்தியாவசிய தேவை ஆகும் உணவு இல்லையேல் நாம் உயிர்
வாழமுடியாது . உயிர் வாழ உணவு தேவை அந்த உணவை உற்ப்பத்தி செய்ய விவசாயி தேவை. அப்ப உணவை உற்பத்தி செய்ய விவசாயியா இருந்தா போதுமே
ஏன் விவசாயம் படிக்கணும் ?என்று
ஒரு கேள்வி எழலாம், இதுக்கு
இதுதான்னு கரணமுனு சொல்ல முடியாது ஏன்னா அது நெறய இருக்கு உதாரணமா சொல்லணுமுனா
எந்த ஒரு விவசாயிய எடுத்துக்கொண்டாலும் கடின உழைப்பாளியா இருப்பாங்க ஆனா இந்த கடின
உழைப்பு அவங்களோட வாழ்க்கைத்தரத்தை உயர்த்தியிருக்குமானு பார்த்தா கண்டிப்பா
இருக்காது . கடின உழைப்போட கொஞ்சம் ஸ்மார்ட் ஒர்க்கும் இருக்கனும் அதுக்கு புதிய
தொழில் நுட்பங்கள் தெரிஞ்சு இருக்கனும் அந்த தொழில்நுட்பங்களை உருவாக்க விவசாயம் படுச்சுஇருக்கணும் , தக்காளி விலை இல்லாதபோது மதிப்புக்கூட்டி விக்க
தெரியணும் , மழை
இல்லைனா குறைந்த தண்ணீரை வைத்து நெல்லை விளைய வைக்கணும் வறட்சியை தாங்கக்கூடிய பயிர்களை உருவாக்கணும்
, மழை , புயல்களை முன்கூட்டியே கணிக்கணும் , ஆட்கள் பற்றாக்குறை இருப்பதால் புதிய இயந்திரங்களை உருவாக்கணும் , பூச்சி நோய்களை
கட்டுப்படுத்தனும் இதை எல்லாம் எளிய
முறையில் உருவாக்கி விவசாயிகளிடம் கொண்டுபோய் சேர்க்கணும் அதுக்கு விவசாயம்
கட்டாயம் படுச்சுஇருக்கணும் .விவசாயம் சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுப்பதற்கு முன் அந்த படிப்பின்
எதிர்காலம் என்ன அம்சங்கள் என்ன வேலை
வாய்ப்புகள் எப்படி என்று தெரிந்து இருக்க வேண்டும் (படித்து முடித்தவுடன் வேலையை
எப்படி உருவாக்குவது என்று தெரிந்து
வைத்திருக்க வேண்டும் ).
அடுத்ததாக விவசாயம் சார்ந்த படிப்புகளை பற்றி பார்ப்போம். அதற்கு முன்னால்
நீங்களா தெளிவு படுத்தி கொள்ளவேண்டிய சில விஷயங்கள் உள்ளன
அவை
1) அங்கீகரிக்கப்பட்டது (approved ) அல்லது அங்கீகாரம் பெற்றது (accredited)
2) இணைப்பு கல்லூரிகள் (Affiliated with)
மேலே கொடுக்கப்பட்டுள்ள இந்த இரண்டு வார்த்தையும் கொஞ்சம் முக்கியமானது .
கவெர்மென்ட் கல்லூரியா இருந்தா அவர்களிடம் அங்கீகாரமோ அல்லது Affiliated இருக்கும்
ஒருவேளை தனியார் கல்லூரிகளாக இருந்தால் அவை அங்கீகாரம் பெற்ற அல்லது இணைப்பு
கல்லூரியா என்பதை தெளிவுபடுத்தி கொள்ளவேண்டும் .
TNAU வை பொறுத்தவரை அதன் உறுப்பு கல்லூரிகளின் விவரங்களை அதன் இணையதளத்தில்
பார்க்கலாம் . அதை தவிர்த்து மற்ற கல்லூரிகள் எனில் எதில் அங்கீகாரம் பெற்றவை
என்று பார்க்கவேண்டும்
பொதுவாக விவசாயம் சார்ந்த படிப்புகளுக்கு அங்கீகாரம் தருவது இரண்டு
1) Indian Council Of Agriculture
Research
2) University Grants Commission
Agricultural Engineering மற்றும் டெக்னாலஜி
படிப்புகளுக்கு NATIONAL ASSESSMENT AND
ACCREDITATION COUNCIL மற்றும் All India Council for Technical
Education அங்கீகாரம் கொடுக்கும்.
0 Comments
Smart vivasayi