தாக்குதலின் அறிகுறிகள்
புழுக்கள் தண்டுகளை
துளைத்து உள்ளே சென்று உண்னும் இதனால்
நடுக்குருத்து காய்ந்து விடுகிறது . குருத்து ஈ நடுக்குருத்தின் அடிப்பாகத்தை
தாக்குவதால் நடுக்குருத்து அழுகிவிடும். இதனால் தாக்கப்பட்ட பயிர்களில் பக்கத் தூர்கள் உருவாகும்.
நடுக்குருத்து காய்தல்
நடுத் தண்டு பாதிப்பு
பக்கத் தூர்கள்
பூச்சியின் விபரம்
இதன் முட்டை அரிசி போன்று
தட்டையாக வெள்ளை நிறத்தில் இருக்கும், நல்ல வளர்ந்த நிலையில் உள்ள குருத்து ஈ வெள்ளை சாம்பல்
நிறத்தில் இருக்கும்.
குருத்து ஈ
கட்டுப்படுத்தும் முறை
பொருளாதார சேத நிலை: 1 முட்டை/சோளம்
(அ) “10% குருத்து
காய்தல்”
சரியான பருவங்களில்
முன்கூட்டியே விதைப்பு செய்வதன் மூலம் இப்பூச்சியின் தாக்குதலைத் தவிர்க்கலாம்.
அறுவடை செய்த உடனே சோளத்தட்டைகளை அகற்ற வேண்டும் அல்லது உழுது விடவேண்டும்.குறைந்த விலை தமிழ்நாடு
வேளாண்மைப் பல்கலைக் கழக மீன் இறைச்சிப் பொறிகளை எக்டருக்கு 12 என்ற
எண்ணிக்கையில் அமைத்து குருத்து ஈக்களை கவர்ந்து அழிக்கலாம். வேப்பங்கொட்டைச் சாறு
5% தெளிக்கலாம்
Comments
Post a Comment
Smart vivasayi