நுனிகுருத்துப் புழு மேலாண்மை
கோ 312, கோ 421, கோ 661, கோ 917 மற்றும் கோ 853 போன்ற எதிர்ப்புத்திறனுள்ள இரகங்களைப் பயிரிடலாம்
நடவு : டிசம்பர் – ஜனவரியில் நடவு செய்யலாம்
ஊடுபயிர்றாக தக்கைப் பூண்டு பயிர் செய்யலாம்
தேவையான நீர்ப் பாசனம்.
இவ் வகையான தாக்குதலுக்கு ஆளாகும்போது கரும்பின் இளம் குருத்தை புழுக்கள் சாப்பிடும். இதனால் நடுக்குருத்து காய்ந்துவிடும்.
இப் புழுக்கள் வெண்மை நிறத்தில் இருக்கும்.
இதனை தடுக்க தேவையான அளவு மட்டுமே நீர் பாய்ச்ச வேண்டும்.
நடவு செய்து 6 வாரங்கள் கழித்து மண் அணைக்க வேண்டும்.
தாக்கப்பட்ட நடுக்குறுத்துக்களை சேகரித்து அகற்ற வேண்டும்,
காய்ந்த நடுக்குருத்தினை எடுத்து அழித்தல்.
ஸ்டம்பியோப்சிஸ் இன்பரன்ஸ் என்ற ஒட்டுண்ணியை ஹெக்டருக்கு 125 (பெண்) என்ற எண்ணிக்கையில் வயலில் விடவும்.
இடைகணுப் புழு:
மேலாண்மை:
கரும்பை பொறுத்தவரை இடைக்கனுப்புழு 20 சதவீத மகசூலை பாதிக்குகிறது. நடவுசெய்த 3 மதங்களிலிருந்து அறுவடை வரை இதன் தாக்குதல் இருக்கும் இது கரும்போட கணுவிடை பகுதியில் பல துளைகள் இடும் இதனால் கணுப்பகுதி சுருங்கி இளன்சிவப்பு நிறத்தில் இருக்கும்
எதிர்ப்புத்திறனுள்ள இரகங்கள்லான கோ 975, கோ 7304, மற்றும் கோ 46 போன்றவற்றை பயிரிடலாம்
முட்டைகளை சேகரித்து அழிக்கவேண்டும்
சோகை உரிப்பு : 150 மற்றும் 210 வது நாட்களில்
தேவைக்கு அதிகமான உர பயன்பாட்டைத் தவிர்த்தல் குறிப்பாக நைட்ரஜனுக்காக அதிக உரமிடுவதை தவிர்க்க வேண்டும் .
புழுக்கள் இருந்தால் அதை சேகரித்து அளிக்க வேண்டும் . இடை காணுப்புழுக்கள் சோகையில் ஒட்டிகொண்டுஇருக்கும் இதை அழிக்க நடவு செய்த ஐந்து ஏழு மற்றும் ஒன்பதாவது மாதங்களில் சோகை உரித்து அதை மண்ணில் புதைத்து விட வேண்டும் .
இனக்கவர்ச்சி பொறிகளை வைக்கலாம் .
முட்டைகளைத் தாக்கும் டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் ஒட்டுண்ணியை 15 நாட்களுக்கு ஒரு முறை நட்ட 4 ம் மாதத்திலிருந்து 6 முறை ஹெக்டருக்கு 2.5 சிசி என்ற அளவில் பயன்படுத்துதல்.
மேல் தண்டுதுளைப்பான்:
மேலாண்மை:
எதிர்ப்புத்திறனுள்ள இரகங்கள்: கோ 419, கோ 745, மற்றும் கோ 6516
தாங்கும் திறனுள்ள இரகங்கள்: கோ 859, கோ 1158, மற்றும் கோ 7224
பெரும்பாலும் புழு பருவத்தில் மட்டுமே கரும்பு பயிரை தாக்கும் . கரும்பின் வளர்ச்சி நிலையை பொறுத்து குருத்தோ அல்லது தண்டுப்பகுதியையோ உள்ள திசுக்களை உண்ணும்
கரும்பிலிருந்து உரிக்கப்பட்ட முதிர்ந்த தோகைகளைக் கொண்டு வயலில் மூடாக்கு போடுதல், ஏப்ரல், மே மாதங்களில் கரும்பு நடவைத் தவிர்த்தல், தேவைக்கேற்ப சிக்கனமாக நீர்பாய்ச்சுதல் போன்றவற்றால் தண்டுத் துளைப்பான் புழுக்களின் தாக்குதலைக் கணிசமாகக் கட்டுப்படுத்தலாம்.
முட்டைகளை சேகரித்து அழித்தல்
முட்டை ஒட்டுண்ணி: டிரைக்கோகிரம்மா மைனூட்டம்
புழுப் பருவ ஒட்டுண்ணி: கொனியோகஸ் இன்டிகஸ்
கூட்டுப்புழு ஒட்டுண்ணி: டெட்ராடிக்கஸ் அய்யாரி
Comments
Post a Comment
Smart vivasayi