மேலாண்மை
தாக்குதலின் அறிகுறிகள்
பூச்சியை கண்டறிதல்
முட்டை
பச்சையான நிறத்தில் முட்டைகள்இருக்கும் , இலையின் நடுநரம்பு அல்லது நெற்பயிர் உறை அல்லது
பச்சைப்புல் ஆகியவற்றில் முட்டை
இடப்பட்டிருக்கும். ஒரு வரிசையில் 10-15 குவியல்களாக முட்டைகள் இடப்பட்டிருக்கும்.
இளம்பூச்சி
இளம் பூச்சிகள் மென்மையான
உடலுடன் மஞ்சளான வெண்மை நிறத்தில் இருக்கும். படிப்படியாக இந்நிறம், பச்சையாக
மாறி இளம் பூச்சி காணப்படும். பின்பு 18-20 நாட்களில்
முதிர் பூச்சிகள் உருவாகும் .
முதிர்ப்பூச்சி
இவை 3-5 மி.மீ நீளம்
கொண்டு, பிரகாசமான பச்சை
நிறத்தில் வேறுபட்ட கருப்பு நிறதில் இருக்கும் , கூம்புப் பலகை வடிவில் சிறப்பான விட்டக்கோடு
இயக்கத்துடன் காணப்படும். ஆண் பூச்சியின் முன் இறக்கையின் நடுப்பகுதியில்
கருப்புநிற புள்ளி இருக்கும் . ஆனால் பெண் இனப் பூச்சியில் அவை கிடையாது.
ஜூலை-செப்டம்பர் மாதத்தில் பூச்சிகள் செயல்திறனுடன் விளங்கும்.
மேலாண்மை
உழவியல் முறைகள்
பச்சைத் தத்துப் பூச்சியை சிறப்பான முறையில் கட்டுப்படுத்துவதற்கு, பச்சைத் தத்துப்பூச்சி மற்றும் துங்ரோ நச்சுயிரி ஆகியவற்றை எதிர்க்கும் திறன் கொண்ட இரகங்களான ஐஆர் 50, ஐஆர் 54, ஐஆர் 64, சிஆர் 1009, பிஒய் 3, கோ 46, மற்றும்வெள்ளைப்பொன்னி ஆகிய இரகங்களைப் பயிரிடலாம் .
நாற்றங்கால் அடியுரமாக வேப்பம்புண்ணாக்கு @ (12.5 கிலோ/20 சென்ட்) அளிக்க வேண்டும்.
முதிர்ச்சியடைந்த நாற்றுக்களை நடவு செய்வதன் மூலம் இலைத் தத்துப்பூச்சிகளால் பரப்பப்படும் நச்சுயிரிகளின் தாக்கத்தைக் குறைக்க முடிகிறது.
தழைச்சத்து உரத்தை தேவையான அளவு மட்டும் அளித்தல் வேண்டும். இதனால் தத்துப்பூச்சியின் தொகை மற்றும் தத்துப்பூச்சி சேதத்திலிருந்து பயிர் இனப்பெருக்கத்தை தடுப்பது ஆகியவற்றில் தழைச்சத்து பங்களிப்பைத் தடுப்பதற்காக அவற்றை குறைந்த அளவு மட்டுமே அளிக்க வேண்டும்.
வயலிலும், வரப்புகளிலும் சிறப்பான களைக் கட்டுப்பாட்டு முறை மேற்கொள்வதால் தத்துப்பூச்சிகளின் ஓம்புயிரிகளை அழிக்க முடிகிறது. மேலும் பயிரின் வீரியத்தன்மையை வளரச் செய்கிறது.
வறட்சிப் பருவத்தில் நெற்பயிரில்லா மற்ற பயிர்களுடன் பயிர் சுழற்சி மேற்கொள்ள வேண்டும். இதனால் நோய்களை ஏற்படுத்தும் மாறுபட்ட ஓம்புயிரிகளைக் குறைக்க முடிகிறது.
மேட்டுப்பாங்கான நெல்லை சோயாமொச்சையுடன் ஊடுபயிர் செய்வதன் மூலம், நெற்பயிரில் இலைத்தத்துப்பூச்சிகளின் தாக்குதலைக் குறைக்க முடிகிறது.
விளக்குக் கம்பத்தின்
அருகில் நாற்றாங்கால் அமைப்பதை தடுத்தல்.
20 சென்ட் நாற்றாங்காலுக்கு 12.5 கிலோ வேப்பபுண்ணாக்கினை இட வேண்டும்.
நாற்று நட்ட நாள் முதல் , 3 நாட்கள் வரை 2.5 சென்டி மீட்டர்
அளவு நீரானது இருக்குமாறு பாதுகாக்க வேண்டும்.
முதிர்ப்பூச்சி
உயிரியல் முறைகள்
முக்கிய முட்டை ஒட்டுண்ணிகள் பின்வருமாறு
ஒலிகோசிட்டா யசுமட்சுய் (குளவி, தேனீ, போன்ற பூச்சியியல் வரிசை டிரைக்கோகிரேமட்டிடே)
அனாக்ரஸ் சிற்றினங்கள்
(குளவி, தேனீ போன்ற
பூச்சிகளின் பூச்சியியல் வரிசை மைமாரிடே)
கொனட்டோசீரஸ்
சிற்றினங்கள் (குளவி, தேனீ சார்ந்த
குடும்பம் மைமாரிடே)
மிக அதிக அளவில்
காணப்படும் கொன்றுண்ணி பச்சை நாவாய்ப்பூச்சி (சிர்டோரினஸ் லிவிடிப்பென்னிஸ்). இவை
முட்டைகள் மற்றும் இளங்குஞ்சுகளை வேட்டையாடிக் கொன்றுவிடும்.
ஸ்ட்ரெப்ஸிப்டீரன்ஸ், சிறு குளவிகள், மற்றும் நுாற்
புழுக்கள் ஆகியவை தத்துப்பூச்சிகளின் இளம் குஞ்சுகள் மற்றும் முதிர் பூச்சிகளில்
ஒட்டுண்ணியாகச் செயல்பட்டு அதனைக் கொன்றுவிடும்.
மேலும் நீர்வாழ்
நாவாய்ப்பூச்சிகள், ஊசித்தட்டான், தட்டான்
பூச்சிகள், மற்றும்
சிலந்திகள் ஆகிய பூச்சிகளாலும் பச்சைத் தத்துப்பூச்சி தாக்கப்படுகிறது. பூசண
நோய்க் காரணிகள் பச்சைத் தத்துப்பூச்சியின் இளம் உயிரிகள் மற்றும் முதிர்
பூச்சிகளைத் தாக்குகிறது.
உயிர் எதிரி குளவி - கோனாடோசிரஸ் வகை
இரை விழுங்கி - மிரிட் நாவாய்பூச்சி
பச்சைத் தத்துப்பூச்சிகளின் எண்ணிக்கைகளைக் கண்டறிவதற்கு விளக்குப்பொறிகளை பயன்படுத்தலாம்.
அதிகாலை நேரத்தில் விளக்குப் பொறியை சுற்றி பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தோ அல்லது தூவியோ கவரப்பட்ட பச்சைத் தத்துப்பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
0 Comments
Smart vivasayi