எந்தெந்த பயிரில் என்ன ஊடுபயிர்?
நெல்லில் ஊடுபயிர்கள்
வயல் மட்டத்திலிருந்து வரப்பின் ஓரத்தில் சுமார் மூன்றில் ஒரு பங்கு உயரத்தில் தட்டை பயறு விதைக்க வேண்டும்.இந்த தட்டை பயறில் நெற்பயிரை தாக்காத அசுவினிகள் உற்பத்தியாகும்.
இதனால் ஏராளமான பொறிவண்டுகள் கவரப்படும்.இந்த பொறிவண்டுகள் நெற்பயிரை தாக்கும் பலவிதமான சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்துகிறது.
நெற்பயிரில் ஊடுபயிராக மணிலா அகத்தி, பயறு வகைகள் (வரப்பு பயிர் ), வெண்டை கிளைரிசிடியா போன்றவற்றை பயிரிட்டு லாபம் பெறலாம்.
நிலக்கடலையில் ஊடுபயிர்கள்
நிலக்கடலையில் ஆமணக்கு செடிகளை வயல் ஓரங்களில் 2 மீட்டருக்கு ஒரு செடி வீதம் நடவு செய்வதால் புரோடீனியா புழுக்களை கவர்ந்து அழிக்கலாம் .
நிலக்கடலையோடு 250 கிராம் கம்பு சேர்த்து கலப்பு பயிராக விதைத்து நிலக்கடலையை தாக்கும் சுருள் பூச்சி , இலைப்பேன் மற்றும் அந்துப்பூச்சியின் சேதத்தைக் கட்டுப்படுத்தலாம்.
10 வரிசை நிலக்கடலைக்கு ஒரு வரிசை என்ற அளவில் ஊடு பயிராக செய்து பொறிவண்டுகளின் பெருக்கத்தை அதிகரிக்கலாம் .
எந்தெந்த பயிரில் என்ன ஊடுபயிர்?
துவரையில் ஊடுபயிர்கள்:
துவரை,பாசிப்பயறு ஆகிய வற்றுடன் சோளம் ஊடுபயிராக பயிரிடுவதால் தத்து பூச்சி மற்றும் காய்புழுக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தலாம்.
பருத்தியில் ஊடுபயிர்கள்:
பருத்தியின் ஓரங்களில் மக்காசோளம் பயிரிடுவதால் அசுவினி,தத்துப்பூச்சி , வெள்ளை ஈ ,அந்துப்பூச்சிகள் போன்றவற்றை அச்செடி மேல் பாடும் போது ஊண் விழுங்கிகள் மக்காசோள பயிரில் அதிகமாக உற்பத்தி ஆவதால் இப்பூச்சிகள் பருத்தி செடிக்குப் பரவுவதை தடுக்க முடியும்.
பருத்தியுடன் சூரிய காந்தி 2.2 என்ற விகிதத்தில் பயிரிடுவதன் மூலம் பருத்தியை தாக்கும் பச்சைத் தத்துப்பூச்சியின் சேதம் குறைகிறது.
பருத்தியில் பச்சை பயிர், உளுந்து ,சோயாமொச்சை ,ஆமணக்கு போன்ற பயிர்களை ஊடுபயிராக பயிரிடுவதின் மூலம் பருத்தியை தாக்கும் பூச்சிகளின் பெருக்கத்தை குறைத்து சேதத்தை தவிர்க்கலாம்.
இறவை நிலம்
வெண்டை ,முள்ளங்கி போன்ற காய்கறிகள் ,பச்சை பயறு ,உளுந்து ,காராமணி போன்ற பயறு வகைப் பயிர்களை பருத்தி வரிசைக்கு இடையில் ஊடுபயிராக பயிரிடலாம்.
வாய்க்கால் வரப்பு பயிராக சூரியகாந்தி ,தினை,மக்காசோளம் போன்றவற்றை பயிரிடலாம்.
மானாவாரி நிலம்
கொத்தமல்லி ,பயறு வகைகள்,சூரியகாந்தி போன்றவற்றை பயிரிடலாம்,ஓமம் கூட பயிரிடலாம்.
0 Comments
Smart vivasayi