பயிர்களுக்கு நட்பா, மாற்றா? களைகள் மண்ணின் மருத்துவர் என சொல்லுவார்கள். ஏன், எப்படி?! உங்கள் வயலில் என்ன என்ன களைகள் வளர்ந்திருக்கிறது, பக்கத்து தோட்டத்தில் என்ன என்ன வளர்ந்து வருகிறது என பொறுமையுடன் கவனியுங்கள். சில களைகள் பொதுவானதாக இருக்கும். ஆனால் உங்கள் வயலில் இருக்கும் மற்ற களைகள், அடுத்த வயலில் உள்ள களைகளுக்கு மாறுபடும். ஏன் ஒரு வயலுக்கும், அடுத்த வயலுக்கும் களைகள் வித்தியாசப் படுகிறது என யோசித்தது உண்டா? பொதுவாக மண்ணை மேம்படுத்தும் வகையில் தான் களைகள் தோன்றும். எந்த சத்துக்கள் குறைந்து இருக்கிறதோ அதை ஈடு செய்யும் வகையில் தான் களைகள் தோன்றும். அடுத்து திரு அரசூர் செல்வம் அவர்கள் ஒருமுறை சொன்னதை கேட்டிருக்கிறேன். களைகளை வேரின் அமைப்பை கொண்டும் பகுத்து பார்க்கலாம். 1. ஆணிவேர் உள்ளவைகள். 2. கிளைவேர்கள் உள்ளது. 3. இந்த இரண்டும் அல்லாத சல்லிவேர்களை கொண்டதாக இருக்கும். கவனித்துப் பாருங்கள். சில வயல்களில் ஆணி வேர் களைகள் அதிகம் தோன்றும். இதன் வேர்கள் அதிக ஆழம் செல்லக் கூடியது. சில வயல்களில் ஆணி வேர் களைகளை பார்க்க இயலாது. கிளை வேர்கள் உடைய களைகள் அதிகம் இருக்கும். சில வயல்களில் இந்த இர...