விதை தேர்வு நெல் சாகுபடியை பொறுத்தவரை விதை தேர்வு என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. நீங்கள் தேர்தெடுக்கும் விதை ஒரே அளவாக இருக்கவேண்டும் , வயது மற்றும் சுத்தமான விதைகளாக இருக்க வேண்டும் (நோய் தொற்று இல்லாமல்) இறுதியாக முளைப்பு திறன் அதிகமுள்ள விதைகளாக இருக்க வேண்டும் . தரமற்ற விதைகளை பிரிப்பதற்கு ஒரு சுலபமான வழி ஒரு வாளியில் நீரை ஊற்றி அதில் நெல்லை போட்டால் முளைப்பு திறன் அற்ற விதைகள் மேலே மிதக்கும் . மிதக்காத விதைகளை விவசாயத்திற்கு பயன்படுத்தலாம். மற்றொரு முறை என்று பார்த்தால் chaffy grain இதில் ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள் அதில் ஒரு முட்டையை விடுங்கள் முட்டை மேற்பரப்பை அடையும் வரை மெதுவாக உப்பு சேர்க்கவும். விதைகளை தண்ணீரில் இறக்கும்போது , நல்ல தரமான விதைகள் மூழ்கும். நீரின் மேற்பரப்பில் மிதக்கும் சாத்தியமற்ற விதைகளை அகற்றவும். தேர்ந்தெடுக்கப்பட்ட விதைகளை நல்ல தண்ணீரில் 2-3 முறை கழுவவும...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்