NPOP என்றால் என்ன எந்த பொருட்களுக்கு எல்லாம் சர்டிபிகேட் வாங்கலாம்னு ஓரளவுக்கு
தெரிஞ்சுருக்குமுன்னு நினைக்கிறேன். அடுத்ததா நாம இதை
வாங்குவதற்கு என்ன செய்ய வேண்டும் யாரை அணுகலாம் என்பதை பற்றி பார்க்கலாம் .
இந்த NPOP இன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் அமைப்புகளின்
பட்டியல் மொத்தம் 29 இருக்கிறது . அதன் விவரங்களை பார்க்க (கிளிக் செய்யவும் ). அந்த லிங்கில்
அணைத்து கொடுக்கப்பட்டிருக்கும் எப்பொழுது அங்கீகாரம்
கொடுக்கப்பட்டுள்ளது எத்தனை வருடம் கொடுக்கப்பட்டுள்ளது அல்லது ப்ரோசஸ் மற்றும் இடைநீக்கம்
செய்யப்பட்டுள்ளதா என்பதையும் அறிந்துகொள்ளலாம். ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் NPOP லிங்கில்
கொடுக்கப்பட்டுள்ளவை மட்டுமே உண்மையானது ஆகும் . மற்றவற்றை நம்பவேண்டாம்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழ்நாடு அங்ககச்
சான்றளிப்புத் துறை (TNOCD) மட்டுமே இருகின்றது . கோயம்பத்தூரில் இதன் தலைமையிடம் இருக்கிறது. இதை விரிவாக பார்க்கலாம் .
முதலில் இதன் அமைப்பு எப்படி என்று பார்த்தால் டைரக்டர் ஒருத்தர் இருப்பார்
அவருக்கு கீழ் டெபுடி டைரக்டர் அவருக்கு அடுத்ததாக அசிஸ்டன்ட் டைரக்டர் இருப்பார். அசிஸ்டன்ட் டைரக்டர்
கீழ் சான்றிதழ் இயற்கை ஆய்வாளர் இரண்டு பேரும் , மற்றும் தமிழ்நாட்டை
நான்கு மண்டலங்களாக பிரித்துள்ளனர் . மண்டலத்திற்க்கு ஒரு ஆளாக நான்கு பேர் இயற்கை
சான்றிதழ் ஆய்வாளர்கள் உள்ளனர் . அந்த
நான்கு மண்டலம் கோயம்புத்தூர் , மதுரை , திருச்சி மற்றும் வேலூர் ஆகும்.
அங்ககச் சான்றளிப்புத் துறையின் அட்ரஸ்
Mr. A. Mathialagan Director
Contact address:
1424 A, Thadagam Road G.C.T Post,
Coimbatore – 641013
Tamil Nadu
Tel.: 0422 2435080
Fax: 0422 2457554
Email: tnocdcbe@gmail.com
Website: www.tnocd.net
TNOCD யில் மொத்தம் நான்கு
வகையான நாடுகளுக்கு சான்றிதழ் கொடுக்கப்படுகிறது அவை
1) NPOP:
NATIONAL
PROGRAMME FOR ORGANIC PRODUCTION
இது ஏற்றுமதி மற்றும் உள்ளூரிலும்
விற்பனை செய்வதற்காக கொடுக்கப்படுகிறது.
2) NOP: National Organic Program.
நீங்கள் அமெரிக்காவிற்கு
உணவுப்பொருட்களை ஏற்றுமதி செய்யவேண்டுமென்று நினைத்தால் NOP வாங்கிக்கொள்ளலாம்
3) JAS: Japanese Agricultural Standard
நீங்கள் ஜப்பான் நாட்டிற்கு உணவுப்பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு JAS தரத்தில்
வாங்கிக்கொள்ளலாம்.
JAS LOGO
4) EU : European
நீங்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டியிருந்தால் அதற்குரிய
இயற்கை சான்றிதழை வாங்கலாம்.
EU LOGO
மேற்கூறிய நாடுகளுக்கு மட்டுமின்றி உங்களுக்கு
ஏற்றுமதி செய்ய தேவைப்படும் நாடுகளுக்கும் நீங்கள் சான்றிதழ் வாங்கலாம் .
Comments
Post a Comment
Smart vivasayi