NATIONAL PROGRAMME FOR ORGANIC PRODUCTION (NPOP)
முதலில் நாம் இயற்கை விவசாய சான்றிதழ் என்றால் என்ன என்பதை தெளிவாக புரிந்து வைத்திருக்கவேண்டும். நீங்கள் வாங்க கூடிய மூலப்பொருட்கள் (தானியங்கள் அல்லது
காய்கறிகள்) இயற்கை இடுபொருட்கள் (மண்புழு உரம் மற்றும் இயற்கை பூச்சி விரட்டிகள்) மூலம் விளைந்தவையாக இருக்கவேண்டும்.
மாறாக, செயற்கை உரம் மூலமாகவோ அல்லது பூச்சி மற்றும் பூஞ்சாண கொல்லிகளை
பயன்படுத்தியிருக்கக்கூடாது. மேலும் களைக்கொல்லி மற்றும் தூண்டப்பட்ட ஹார்மோன்களும் பயன்படுத்தியிருக்கக்கூடாது. இதை கண்காணித்து ஏற்றுமதி மற்றும்
உள்ளூர் விற்பனைக்கு சான்றிதழ் அளிப்பதே இயற்கை விவசாய சான்றிதழ் ஆகும்.
இதில் ஏற்றுமதிக்கான
சான்றிதழ் அளிப்பது Apeda வின் கீழ் உள்ள NPOPயாகும். இது ஏற்றுமதிக்காக மட்டும்மல்ல உள்ளூர் வர்த்தகத்திற்கு
பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த APEDA 2000தில் ஆரம்பிக்கப்பட்டு 2002இல் இருந்து
சான்றிதழ்களை கொடுத்து வருகிறது.
முதலில் அங்கீகரிக்கப்பட்ட அளவுகோல்களின்படி
இயற்கை வேளாண்மை மற்றும்
தயாரிப்புகளுக்கான (பயிர் அறுவடை, மீன் வளர்ப்பு, கால்நடை பொருட்கள்
உட்பட) சான்றிதழ் திட்டத்தை மதிப்பீடு செய்வதற்கான வழிமுறைகளை வழங்குவது.
அடுத்து இந்த திட்டத்தின் கீழ் அங்கீகாரம் பெற விரும்பும் சான்றிதழ் அமைப்புகளின் சான்றிதழ் திட்டங்களை அங்கீகரித்தல். (அதாவது நீங்க ஒரு தனியாக ஒரு இயற்கை சான்றிதழ் மையம் தொடங்க வேண்டுமென்றால் அதற்கான அங்கீகாரத்தை NPOP அளிக்கும் ). தமிழ்நாட்டை பொறுத்தவரை TNOCD மட்டுமே இருக்கிறது.
NSOP வுடன் இணக்கமாக
செயல்பட்டு இயற்கை பொருட்களின் சான்றிதழ் வாங்குவதை எளிதாக்குதல்.
. மேலும் ஏற்றுமதி செய்யும்போது இரு
நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தத்தின் படி அல்லது இறக்குமதி செய்யும் நாட்டின்
தேவைகளுக்கு ஏற்ப இறக்குமதி செய்யும் நாடுகளின் இயற்கை விவசாய பொருட்களின் தரங்களுக்கு இணங்க இயற்கை பொருட்களின் சான்றிதழை எளிதாக்குதல். (புரியும்படி சொல்லவேண்டுமென்றால்
ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு இயற்கை பொருட்களுக்கான தரம் இருக்கும் அதற்கேற்றவாறு NPOP உங்களுக்கு சான்றிதழ்
கொடுக்கும் ).
இறுதியாக இயற்கை வேளாண்மை மற்றும் இயற்கை செயலாக்கத்தின்
வளர்ச்சியை ஊக்குவிக்க பல பயிற்சிகளை NPOP அளிக்கிறது .
எதற்கெல்லாம் NPOP நீங்கள் இயற்கை சான்றிதழ் வாங்கலாம் என்று பார்க்கலாம்
1)ஆர்கானிக் பயிர்
உற்பத்தி
2) கால்நடைகள், கோழி வளர்ப்பு மற்றும்
பொருட்கள்
3) ஆர்கானிக் தேனீ
வளர்ப்பு / அப்பிகல்சர்
4) ஆர்கானிக் அக்வா
கல்ச்சர் உற்பத்தி
5) ஆர்கானிக் மஷ்ரூம்
உற்பத்தி
6) ஆர்கானிக் சீவீட், (Organic Seaweed) அக்வாடிக் பிளான்ட்ஸ்
மற்றும் கிரீன்ஹவுஸ் பயிர் உற்பத்தி. போன்றவற்றிற்கு
நீங்கள் சான்றிதழ் வாங்கலாம்.
இயற்கை சான்றிதழ்
வாங்க யாரை அணுகலாம் என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம் .
Comments
Post a Comment
Smart vivasayi