Ad Code

விவசாய கடன்களும் மானியங்களும் - 1

                                         




               இந்தியாவை பொறுத்தவரை அரசாங்கம் மற்றும் தனியார் வங்கிகள் உள்ளன. அதில் வித விதமான கடன்களும் கொடுக்கப்படுகின்றன. உதாரணமாக வீடு கட்ட வேண்டுமா அல்லது புதிதாக வாகனம் வாங்க வேண்டுமா இல்லை ஏதேனும் புதிய தொழில் தொடங்க வேண்டுமா அனைத்திற்கும் கடன் வசதி இருக்கிறது. ஆனால் விவசாயத்திற்கு மட்டும்தான் பலவகையான விவசாயக்கடன்கள் கொடுக்கபடுகின்றன வட்டி விகிதமும் குறைவு , கடனை திரும்ப செலுத்த கூடிய கால அளவும் கூட அதிகம்தான்.

  மற்ற கடன்களை விட விவசாயத்திற்கு மட்டும் ஏன் வகை வகையான கடன்கள் கொடுக்கப்படுகின்றன இதற்கு சரியான காரணம்  சொல்லவேண்டும் என்றால் இந்திய பொருளாதாரம் 80 சதவீதத்திற்க்கு மேல் விவசாயம் மற்றும் அதை சார்ந்த பொருட்களை நம்பி இருக்கிறது. அதுமட்டுமின்றி நாட்டில் 70%  விவசாய்களாகவும் அல்லது விவசாயம் சார்ந்த தொழில் செய்பவர்களாகவும் இருக்கின்றர். சரியான வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் அதனால்தான் இதற்கு அதிக கடன்களும் மானியங்களும் கொடுக்கப்படுகின்றன .

        நீங்கள் கடன் வாங்க போகிறீர்கள் என்றால் அந்த கடனை பற்றிய தெளிவான புரிதல் இருக்கவேண்டும் . குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் நமக்கு  என்ன வகையான கடன், எவ்வளவு கடன் வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும் . உங்களுக்கு இந்த பருவத்திற்கு 15000 தேவை படுகிறது , தற்பொழுது உங்கள் கையிருப்பு 5000 இருக்கிறது என வைத்துக்கொள்வோம் , நீங்கள் 8000 இருந்து 11000 வரை கடன் வாங்கினால் போதுமானது . ஆனால் இங்கே நிறைய பேர் 15000 கூட இல்ல 20000திற்கு  அல்லது 25000 மேல் கடன் வாங்குகின்றனர் . இப்படி அதிகமாக கடன் வாங்குவதற்கு இதை முக்கியமான கரணம் என்று சொல்ல முடியாது அனல் இதுவும் ஒரு காரணமாக சொல்லலாம் அது புதிய அரசாங்கம் பதவியேற்றால் கடனை தள்ளுபடி செய்து விடுவார்கள் என்ற ஒரு நம்பிக்கை . அளவுக்கு மீறி வாங்குகிற கடன் என்றுமே நல்லதல்ல உங்களுக்கு எவ்வளவு தேவையோ அந்த அளவு கடன் வாங்கினால் போதும். 

                    அடுத்ததாக நாம் பார்க்க வேண்டியது கடனை நீங்கள் திரும்ப செலுத்த கூடிய காலம் . என்னதான் வட்டி கம்மியாக இருந்தாலும் அல்லது கடனை திரும்ப செலுத்த கூடிய காலம் அதிமாக இருந்தாலும் எவ்வளவு  வேகமாக கடனை திரும்ப செலுத்த முடியுமோ அவ்வளவு சீக்கிரம் திரும்ப செலுத்துவது நல்லது . சில பேர் தவணைக்காலம் அதிகமாக இருக்கிறது இறுதியாக கட்டிக்கொள்ளலாம் என இருப்பிர்கள் இது மிக தவறு ஏன் என்றால் நீங்கள் பணம் கட்டவேண்டிய காலத்தில் கையில் பணம் இல்லாமல் போகலாம் மற்றும் நீங்கள் கட்டவேண்டிய வட்டி தொகை அதிகமாக இருக்கும் பின்பு அசலையும் கட்டுவது  கடினமாகிவிடும் .

      விவசாய கடன்களின் நன்மைகள் என்று பார்க்கும்போது மற்ற கடன்களை விட  விவசாயக்கடன் சீக்கிரமாக கிடைத்துவிடும் . நீங்கள் லோன் வாங்கும் போது  கொடுக்கவேண்டிய டாக்குமெண்ட் குறைவாக இருக்கும் . கடனை திரும்ப செலுத்தும் காலம் அதிகமாக இருக்கும் மற்றும் வட்டி விகிதம் கம்மியாக இருக்கும் .

விவசாயிகளுக்கு கொடுக்கப்படும் கடன் வகைகள் என்று பார்த்தால் ஒரு மூன்று வகையாக பிரிக்கலாம் அந்த மூன்று பிரிவுக்குள் பலவகையான கடன்கள் கொடுக்கப்படுகின்றன

                                1)  விவசாய நடவடிக்கைகளுக்கான கடன்கள்
                                2)  விவசாய உள்கட்டமைப்புக்கான கடன்
                                3)  விவசாய தொடர்புடைய நடவடிக்கைகளுக்கான கடன்கள்

    விவசாய நடவடிக்கைகளுக்கான கடன்கள் என்பது விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழில்களுக்கு கொடுக்கப்படுகிறது (பால், மீன்வளம், கால்நடை வளர்ப்பு, பட்டு வளர்ப்பு மற்றும் கோழி வளர்ப்பு )  விவசாயத்திற்கு என்று பார்க்கும்பொழுது இரண்டுவிதமாக பிரிக்கலாம் அது அறுவடைக்கு முன் அறுவடைக்கு பின் . உரம் வாங்குவது , கலை  எடுப்பது , அறுவடை செய்வது முன் வாங்கலாம் . கிரேடிங் , போக்குவரத்துக்கு போன்ற கடன்களை அறுவடைக்கு பின்வாங்கலாம்.

       விவசாய உள்கட்டமைப்புக்கான கடன் என்பது  மண் பாதுகாப்பு, பம்ப் செட் , திசு வளர்ப்பு , இயற்கை பூச்சி மற்றும் பூஞ்சண கொல்லிகள் தயாரிக்கவும் மற்றும் இயற்கை உரம் , மண் புழு உரம் தயாரிக்கவும் இதன் கீழ் கொடுக்கப்படுகிறது.

      விவசாய தொடர்புடைய நடவடிக்கைகளுக்கான கடன்கள் என்பது வேளாண் மருத்துவமனை மற்றும் வேளாண் வணிக மையம், வேளாண் செயலாக்க தொடக்கங்கள்(startups ) உழவர் சேவை சமூகம் இதன் கீழ் கொடுக்கப்படுகிறது.

     
        அடுத்த பகுதியில் குறுகிய காலக்கடன் , நடுத்தர மற்றும் நீண்ட கால கடன். விவசாயத்திற்கான தங்க நகை கடன் வாங்குவது பற்றி பார்ப்போம் 




Post a Comment

0 Comments

Comments

Ad Code