ஆர்கானிக் விவசாயி - 5
Tnocd யில் பதிவு செய்ய
நான்கு வகையான சான்றிதழ் பதிவு உள்ளன அவை
1) Form 1A1 - நீங்கள் மட்டும்
தனியாக வாங்குவதற்கு இதை பயன்படுத்தலாம் .
2) FORM – I A2- ஒன்றுக்கும் மேற்பட்ட
விவசாயிகள் சேர்ந்து வாங்குவதற்கு இதை பயன்படுத்தலாம்
3) FORM – I A3- நீங்கள் சொந்தமாக நிலம் வைத்திருந்து ஒரு கார்ப்பரேட் ஆகவோ இல்லை பிஸ்ஸின்ஸ்
செய்பவராக ஆகவோ இருந்தால் இதை பயன்படுத்தலாம் .
4) FORM – I A4- நீங்கள் ஒரு கார்ப்பரேட் ஆகவோ இல்லை பிஸ்ஸின்ஸ்
செய்பவராக ஆகவோ இருந்து உங்களிடம் சொந்தமாக நிலம் இல்லாமல் விவசாயிகளிடம்
ஒப்பந்தம் செய்து சான்றிதழ் வாங்க இதை பயன்படுத்தலாம் .
இப்பொழுது TNOCDயில் பதிவு
செய்வதை விவரமாக பார்க்கலாம். இந்த பார்மில் மொத்தம் 23 கேள்விகள் இருக்கும்
வரிசையாக இருக்கும்.
1) இதில் உங்கள் பெயர்
முகவரி , கைபேசி எண் மற்றும்
இமெயில் முகவரியை எழுத வேண்டும் . குறிப்பாக உங்களுடைய வில்லேஜ் ,பிளாக் ,தாலுகா ,மாவட்டம் மற்றும்
உங்கள் பண்ணை இருக்கும் இடம் போன்றவற்றை குறிப்பிட வேண்டும். உங்களுடைய ஆதார் எண் மற்றும் பான் கார்டு விவரங்களை எழுத வேண்டும்.
2)
எதற்கு அங்ககச் சான்றிதழ் வேண்டும் என்பதை குறிப்பிடவேண்டும் அதாவது பயிர் உற்பத்தி பொருட்களுக்கா இல்லை
தேன் அல்லது பால் உற்பத்தி பொருட்களுக்கா என்பதை குறிப்பிடவேண்டும் .
3) எந்த தரத்தில் வேண்டும் என்று சொல்லவேண்டும் ஏற்றுமதி
தரத்திலா இல்லை எந்த நாட்டின் ஏற்றுமதி தரத்தில் அமெரிக்க , ஜப்பான் , ஐரோப்பிய தரமா ,அல்லது எந்த நாட்டின்
தரத்தில் உங்களுக்கு அங்ககச் சான்றிதழ் வேண்டும் என குறிப்பிட வேண்டும்.
4)
மொத்தம் எவ்வளவு ஏரியா நீங்கள் அங்கக விவசாயம் செய்கிறீர்கள் என்பதை சொல்ல
வேண்டும் அந்த இடத்தின் சர்வே நம்பர் மற்றும் மேப்பை இணைத்திட வேண்டும் .
5)
மொத்தம் எவ்வளவு ப்ளட்களாக / பகுதிகளாக பிரித்து இருக்கிறீர்கள் என்பதை
குறிப்பிட வேண்டும் .
6)
எந்த வகையான பயிர் முறை பின்பற்றுகிறீர்கள் . பயிரின் பெயர் , பயிரின் அளவு (எவ்வளவு
ஏக்கரில்) இறுதியாக பயிர் சுழற்சி முறை போன்றவற்றை குறிப்பிடவேண்டும்.
7)
போன முறை எந்த முறையில் பயிர் செய்தீர்கள் (நீங்கள் பயன்படுத்திய உரம், பூச்சிக்கொல்லி
போன்றவற்றை தெரிவிக்க வேண்டும்).
8) உங்கள் நிலத்திற்கு அருகில் உள்ள அல்லது சுற்றியுள்ள
நிலங்களை பற்றிய விவரங்களை சொல்லவேண்டும்
9)
பண்ணையின் எல்லை பற்றி குறிப்பிட வேண்டும் .
10) பயிர் பாதுகாப்பு முறை பற்றி சொல்ல வேண்டும் . நீங்களே வீட்டில்
தயாரிக்கிறீர்களா அல்லது வெளியில் இருந்து வாங்குகிறீர்களா என சொல்ல வேண்டும். வெளியில் வாங்கினால் அதை பற்றிய விவரங்கள் சொல்லவேண்டும். நீங்கள் பயன்படுத்தக்கூடிய இயற்கை பூச்சி மற்றும் பூஞ்சண கொல்லிகள் விவரங்களை
சொல்ல வேண்டும்.
11) உரங்கள் பற்றி சொல்ல வேண்டும் . நீங்களே வீட்டில்
தயாரிக்கிறீர்களா அல்லது வெளியில் இருந்து வாங்குகிறீர்களா என சொல்ல வேண்டும்
வெளியில் வாங்கினால் அதை பற்றிய விவரங்கள் சொல்லவேண்டும். என்ன விதமான உரங்கள் பற்றிய விவரங்கள் சொல்ல
வேண்டும்.
12) நீங்கள் பயிரிட போகும்
பயிரின் விதைகள் எங்கிருந்து வாங்கப்பட்டது என்ற விவரத்தை இணைக்கவேண்டும் .
13)
மண் வகையை குறிப்பிட வேண்டும் மண் மற்றும் நீர் பரிசோதனை செய்து அதன்
விவரங்களை இணைக்க வேண்டும்.
14)
உங்கள் மண்ணில் ஏதாவது பிரச்னை இருந்தால் சொல்லவேண்டும் . உதாரணமாக கலர் உவர்
நிலமாக இருந்தால் அதை சொல்லவேண்டும் .
15)
என்ன விதமான இயற்கை களை கொல்லிகள் பயன்படுத்த போவது பற்றி சொல்ல வேண்டும், வேறு கலையெடுத்தல்
விவரங்கள்ளையும் கூற வேண்டும் .
16) என்ன வகையான நீர்ப்பாசனம் செய்கிறீர்கள் என்று சொல்ல வேண்டும் உதாரணமாக கிணறு, கால்வாய், தொட்டி, அல்லது மானாவாரி ஆகியவற்றில் எந்தவகை பாசனம்
பயன்படுத்துகிறீர்கள் என குறிப்பிடுங்கள்
.
17) தூய்மைக்கேடு அல்லது மாசு ஏதாவது இருக்கிறதா என்பதை குறிக்க வேண்டும் .
18) உபகரணங்கள் அல்லது இயந்திரங்கள் விவரங்கள் என்ன இயந்திரங்கள் உங்களிடம்
சொந்தமாக இருக்கிறது எதை வாடகைக்கு எடுக்க போகிறீர்கள் என சொல்ல வேண்டும்.
19) அறுவடை முடிந்த பின்பு உலர்த்தும் இடம் பற்றிய
விவரங்களை தெரிவிக்கவேண்டும் . சேமிப்பு கிடங்கு , மற்றும் கால் நடை
இருந்தால் அதை பற்றிய விவரங்களையும் தெரிவிக்க வேண்டும்.இதை தவிர்த்து வேறு
தகவல்கள் இருந்தால் தெரிவிக்க வேண்டும் .
20) பணம் செலுத்தியதற்கான விவரங்களை குறிப்பிட வேண்டும் .
பணம் நேரடியாகவோ அல்லது டிமாண்ட் ட்ராப்ட் மூலமாகவும் செலுத்தலாம்.
21)
இறுதியாக பார்மில் கையப்பம் இட்டு
அதில் மேற்குறிய அணைத்து டாக்குமென்டஸ்யயும் ஒரு கவரில் போட்டு கொடுக்கவும்
இணைக்க வேண்டிய டாக்குமெண்ட்ஸ்
1) பண்ணை பொது விவரங்கள்
2) நில வரைபடம்
3) மண் பரிசோதனை
4) நீர் பரிசோதனை
5) வருடாந்திர பயிர் திட்டம் (3 copies )
6) TNOCD அக்ரிமெண்ட்
7) கம்ப்யூட்டர் சிட்டா
8) பான் கார்டு (copy)
9) ஆதார் கார்டு (copy )
10) பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 2
இவை அனைத்தையும் இணைத்து கொடுக்கவேண்டும்
Comments
Post a Comment
Smart vivasayi