எந்தெந்த நாடுகளுக்கு சான்றிதழ் கொடுக்கிறார்கள்
என்று பார்த்தோம் அடுத்ததாக வேளாண்மை பொருட்களை பற்றி பார்ப்போம்.
பயிர் உற்பத்தி ( crop
production)
விவசாயம் சார்ந்த
அனைத்து உற்பத்தி பொருட்களுக்கும் சான்றிதழ் கொடுக்கப்படுகிறது. தேன் (Honey) பால் மற்றும் கால்நடை
பொருட்கள்(Dairy and other Livestock products) மேலும் காடுகளில்
இருந்து பெறப்படும் பொருட்களுக்கும் Forest collection) TNOCD இருந்து அங்ககச் சான்றிதழ் கொடுக்கப்டுகிறது.
சரிங்க இப்ப அங்ககச்
சான்றிதழ் பற்றி புரியும் நினைக்கிறேன். இப்ப நாம அடுத்த கட்டத்தை பாப்போம் , நீங்க இயற்கை விவசாயம்
பண்ணனும்னு முடிவு செய்தால் , ஆரம்பிப்பதற்கு முன்பு
சில வேலைகள் செய்ய வேண்டும் அவற்றை பற்றி பார்ப்போம்.
அங்ககச் சான்றிதழ்
வாங்குவதற்கு நீங்கள் TNOCD இல் பதிவு செய்ய வேண்டும். அதற்க்கு என்ன தேவை என்று பார்ப்போம்.
1) முதல் வேலையாக நீர்
மற்றும் மண் பரிசோதனை கட்டாயமாக செய்திருக்கவேண்டும்.
ஒருவேளை உங்களுக்கு மண் மற்றும் நீர் பரிசோதனைக்காக எப்படி மாதிரி எடுப்பது என்பது தெரியவில்லையென்றால் அருகில் உள்ள மண் பரிசோதனை நிலையத்தை அணுகலாம் அல்லது யூடூபில் பார்க்கலாம் நிறைய விடீயோக்கள் உள்ளன
2) வருடாந்திர பயிர்
திட்டம் (ANNUAL CROPPING PROGRAMME)
நீங்கள் பதிவு
செய்யும்போது வருடாந்திர பயிர் திட்டதையும்
சேர்த்து கொடுத்தாக வேண்டும். சற்று விளக்கமாக சொல்ல
வேண்டுமானால் நீங்கள் இந்த வருடம் முழுவதும் என்ன பயிர் செய்ய போகிறீர்கள் எந்த
பருவத்தில் செய்ய போகிறீர்கள் என்பதை அவர்களிடம் கொடுத்துவிட வேண்டும். அடுத்ததாக
எவ்வளவு ஹெக்டேர் பயிர் செய்வீர்கள் என்ற விவரத்தை படிவத்தில் பூர்த்தி
செய்யவேண்டும். எப்படி பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை கீழே உள்ள படத்தை பார்க்கவும் (Click Video Link)
பார்மில் இரண்டு
பிரிவுகள் இருக்கும் ஓன்று perennial மற்றொன்று annual என்று இருக்கும் . perennial என்பது இரண்டு
ஆண்டுகளுக்கு மேல் உள்ளவையாகும் உதாரணமாக மா , கொய்யா ஆகும். annual ஒரு ஆண்டுக்குள்
பலன்தருபவையாகும் உதாரணமாக நெல் , காய்கறி வகைகள் போன்றவையாகும் . நீங்கள் புதிதாக
இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பித்தால் இதை
எல்லாம் கவனத்தில் கொள்வது அவசியம்
3) Application
Form for Registration of organic Farm unit
Form 1A1
TNOCD ல பதிவு பண்றது ஒரு பெரிய புரோசஸ் இதுக்குத்தான் நிறைய டாக்குமெண்ட்ஸ்
தேவைப்படும் ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
Comments
Post a Comment
Smart vivasayi