Skip to main content

Posts

Showing posts from March, 2020

ஆர்கானிக் விவசாயி - 5

                                                                    ஆர்கானிக் விவசாயி   - 5             Tnocd யில் பதிவு செய்ய நான்கு வகையான சான்றிதழ் பதிவு உள்ளன அவை 1)   Form 1A1 - நீங்கள் மட்டும் தனியாக வாங்குவதற்கு இதை பயன்படுத்தலாம் . 2)    FORM – I A2- ஒன்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சேர்ந்து வாங்குவதற்கு இதை பயன்படுத்தலாம் 3)    FORM – I A3-   நீங்கள் சொந்தமாக நிலம் வைத்திருந்து ஒரு கார்ப்பரேட் ஆகவோ இல்லை பிஸ்ஸின்ஸ் செய்பவராக ஆகவோ இருந்தால் இதை பயன்படுத்தலாம் . 4)   FORM – I A4- நீங்கள்   ஒரு கார்ப்பரேட் ஆகவோ இல்லை பிஸ்ஸின்ஸ் செய்பவராக ஆ...

ஆர்கானிக் விவசாயி - 4

எந்தெந்த நாடுகளுக்கு சான்றிதழ் கொடுக்கிறார்கள் என்று பார்த்தோம் அடுத்ததாக வேளாண்மை பொருட்களை பற்றி பார்ப்போம் .   பயிர் உற்பத்தி   ( crop production)                    விவசாயம் சார்ந்த அனைத்து உற்பத்தி பொருட்களுக்கும் சான்றிதழ் கொடுக்கப்படுகிறது . தேன் (Honey)   பால் மற்றும் கால்நடை பொருட்கள் (Dairy and other Livestock products) மேலும் காடுகளில் இருந்து பெறப்படும் பொருட்களுக்கும் Forest collection) TNOCD இருந்து   அங்ககச் சான்றிதழ் கொடுக்கப்டுகிறது .              சரிங்க இப்ப அங்ககச் சான்றிதழ் பற்றி புரியும் நினைக்கிறேன். இப்ப நாம அடுத்த கட்டத்தை பாப்போம் , நீங்க இயற்கை விவசாயம் பண்ணனும்னு முடிவு   செய்தால் , ஆரம்பிப்பதற்கு முன்பு சில வேலைகள் செய்ய வேண்டும் அவற்றை பற்றி பார்ப்போம் .         அங்ககச் சான்றிதழ் வாங்குவதற்கு நீங்கள் TNOCD இல் பதிவு செய்ய வேண்டு...

ஆர்கானிக் விவசாயி - 3

             NPOP என்றால் என்ன எந்த பொருட்களுக்கு எல்லாம் சர்டிபிகேட் வாங்கலாம்னு ஓரளவுக்கு தெரிஞ்சுருக்குமுன்னு நினைக்கிறேன் . அடுத்ததா நாம இதை வாங்குவதற்கு என்ன செய்ய வேண்டும் யாரை அணுகலாம் என்பதை பற்றி பார்க்கலாம் .     இந்த NPOP இன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் அமைப்புகளின் பட்டியல் மொத்தம் 29 இருக்கிறது . அதன் விவரங்களை பார்க்க ( கிளிக் செய்யவும் ). அந்த லிங்கில் அணைத்து கொடுக்கப்பட்டிருக்கும் எப்பொழுது அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது எத்தனை வருடம் கொடுக்கப்பட்டுள்ளது அல்லது ப்ரோசஸ் மற்றும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் அறிந்துகொள்ளலாம் . ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் NPOP லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளவை மட்டுமே உண்மையானது ஆகும் . மற்றவற்றை நம்பவேண்டாம் .          தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழ்நாடு அங்ககச் சான்றளிப்புத் துறை   ( TNOCD) மட்டுமே இருகின்றது . கோயம்பத்தூரில் இதன் தலைமையிடம் இருக்கிறது . இதை விரிவாக பார்க்கலாம் . ...

ஆர்கானிக் விவசாயி - 2

NATIONAL PROGRAMME FOR ORGANIC PRODUCTION (NPOP) முதலில் நாம் இயற்கை விவசாய சான்றிதழ் என்றால் என்ன என்பதை தெளிவாக புரிந்து வைத்திருக்கவேண்டும் . நீங்கள் வாங்க கூடிய மூலப்பொருட்கள் ( தானியங்கள் அல்லது காய்கறிகள் ) இயற்கை இடுபொருட்கள்   ( மண்புழு உரம் மற்றும் இயற்கை பூச்சி விரட்டிகள் )  மூலம் விளைந்தவையாக இருக்கவேண்டும். மாறாக , செயற்கை உரம் மூலமாகவோ அல்லது பூச்சி மற்றும் பூஞ்சாண கொல்லிகளை பயன்படுத்தியிருக்கக்கூடாது .  மேலும் களைக்கொல்லி மற்றும் தூண்டப்பட்ட ஹார்மோன்களும்   பயன்படுத்தியிருக்கக்கூடாது . இதை  கண்காணித்து ஏற்றுமதி மற்றும் உள்ளூர் விற்பனைக்கு சான்றிதழ் அளிப்பதே இயற்கை விவசாய சான்றிதழ் ஆகும் .         இதில் ஏற்றுமதிக்கான சான்றிதழ் அளிப்பது Apeda வின் கீழ் உள்ள NPOP யாகும். இது ஏற்றுமதிக்காக மட்டும்மல்ல உள்ளூர் வர்த்தகத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம் . இந்த APEDA 2000 தில்  ஆரம்பிக்கப்பட்டு 2002 இல் இருந்து சான்றிதழ்களை கொடுத்து வருகிறது . இந்த NPOP யின்   நோக்கங்கள் என்ன என்று ப...