ஆர்கானிக் விவசாயி - 1
இயற்கை விவசாய உணவு
பொருட்களை கண்டுபிடிப்பது எப்படி?
சில தசாப்தங்களுக்கு முன் நாம் இயற்கை விவசாயம்தான் செய்து
கொண்டுஇருந்தோம். ஆனால், இப்போது செயற்கை விவசாயத்திற்கு மாறிவிட்டோம். அதேசமயம் கடந்த
பதினைந்து வருடங்களுக்கு மேலாக இயற்கை விவசாயம் விழிப்புணர்வு ஏற்பட்டு நாம் அதை நோக்கி நாம் பயணித்து
கொண்டுயிருக்கிறோம். ஆனால் இயற்கை முறையில்
விளைவித்த உணவுப் பொருட்கள் என சில கடைகளில் விற்கப்பட்டும் பொருட்கள் அனைத்தும் உன்மையில் இயற்கை
உணவுப்பொருட்கள்தான்னா, அதை எப்படி தெரிந்து கொள்வது ? நீங்கள் வாங்குபவரா இருந்தாலும் அல்லது வாங்கி
விற்பவராக இருந்தாலும் அதை எப்படி
கண்டறிவதுஎன பார்க்கலாம்.
லோகோ அல்லது லேபிள்
முதலில் நீங்கள்
காய்கறியோ அல்லது தானியங்கள்லோ வாங்கும் பொழுது லோகோ அல்லது லேபில் இருக்கிறதா
என்று பார்க்க வேண்டியது அவசியம் ஒருவேளை இல்லையென்றாலோ அல்லது சரியாக
அச்சடிக்கவில்லையெனில் அது போலியாக இருக்கலாம். ஒவ்வொரு நாட்டுக்கும் என தனி லோகோ இருக்கும். நம் நாட்டுக்கும் கூட உள்ளது , கீழே உள்ள படத்தை பார்க்கவும்.
இந்த லோகோ அப்பீடாவால் (APEDA) ஏற்றுமதி தரத்திலும் மற்றும்
இந்தியாவிற்குள்ளும் விற்பனை செய்ய தரப்படுவதாகும். நீங்கள் ஏற்றுமதியாளராக இருந்தால், இயற்கை விவசாய நாட்டின் லோகோ
தெரிந்துவைத்திருப்பது அவசியம். உதாரணத்திற்கு உணவு பொருட்களுக்கு இந்த
லோகோ வாங்குவது அவசியம். அதே போல், வெளிநாட்டில் இருந்து இயற்கை உணவு பொருட்களை இறக்குமதி செய்தால் இறக்குமதி
செய்யப்பட்ட பொருட்களை வாங்கினால் அந்த கீழே அமெரிக்கா மற்றும் கனடா நாட்டின் லோகோ
கொடுக்கப்பட்டுள்ளது.
இது அமெரிக்க நாட்டின் லோகோ
இது கனடா நாட்டின் லோகோ
இந்தியாவை பொறுத்தவரை மேலும் இரண்டு லோகோ உள்ளன, ஓன்று Jaivik Bharat (படம் கீழே) இது fssai யால் கொடுக்கப்படுகிறது லைசென்ஸ் நம்பர் இருக்கும்.
Food Safety and Standards Authority of India
அடுத்ததாக பார்க்கப்போகும் லோகோ பி ஜி ஸ் (PGS ) இது வேளாண்மை சான்றிதழ் அமைப்பு ஆகும். மற்றும் விவசாயம், கூட்டுறவு மற்றும் விவசாயிகள்
நலத்துறை விவசாயம் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் கீழ் வருகிறது.
மேலும் இந்த மூன்று லோகோ பற்றி அடுத்த பகுதியில் விரிவாக
பார்க்கலாம்.
Comments
Post a Comment
Smart vivasayi