1. உப்புத்தன்மை உள்ள ஆழ்துளை கிணறு மற்றும் கிணற்று நீரை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஆற்றுத் தண்ணீரை பயன்படுத்துவது நல்லது. 2. ஒரு ஏக்கருக்கு இரண்டு கிலோ அல்லது ஒரு லிட்டர் வேம் 15 நாட்களுக்கு ஒரு முறை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து பாசனத்தின் வழியாக கொடுக்கலாம். 3. ஒவ்வொரு ஐந்து அல்லது ஏழு நாட்களுக்கு ஒரு முறை இ எம் கரைசல் 200 லிட்டர் தண்ணீரில் 2 லிட்டர் பாசனத்துடன் கலந்து கொடுக்கலாம். 4. ஜிங்க் மொபைலைசிங் பாக்டீரியா ஒரு லிட்டரை 200 லிட்டருடன் கலந்து கொடுக்கலாம். 5. மாலை வேளையில் மட்டுமே நீர்ப்பாசனம் செய்யலாம். இரண்டு சென்டிமீட்டர் அளவுக்கு மட்டும் தண்ணீர் இருக்குமாறு பார்த்துக் கொள்ளலாம். அதிகம் தண்ணீர் கொடுப்பது உப்பு பெருக்கத்திற்கும் அதன் மூலம் பாசிப் பெருகுவதற்கும் வாய்ப்பாக அமையும். 6. நிலத்தின் ஈரம் குறைவதை உன்னிப்பாக கவனித்து மீண்டும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நிலத்தை காய விடக்கூடாது. 7. 10 லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி மீன் அமிலம் அல்லது 200 மில்லி பஞ்சகாவியா அல்லது இஎம் கரைசல் திரவத்தை தெளிப்பாக வாரம் ஒரு முறை கொடுக்கலாம்.
1. 1 லிட்டர் வேப்ப எண்ணெயில் 3 கிலோ நுண்மணல் மற்றும் 3 கிலோ சாணத்தை 3 நாட்கள் ஈரம் காயாமல் ஈரச்சாக்கு கொண்டு போர்த்தி குவியலாக வைத்து 4ஆம் நாள் அதை 150 லிட்டர் நீரில் கலந்து ஏக்கருக்கு தெளிக்க சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். 2. 10 கிலோ காய்ந்த சாணத்தை தூளாக்கி அத்துடன் செங்கல் சூளை சாம்பல் சேர்த்து அதிகாலை வேளையில் தூவினால் சாறு உறிஞ்சும் பூச்சி சாம்பல் மற்றும் துருநோயைக் கட்டுப்படுத்தலாம். 3. வெட்டி வேர் புல்லை மண் சரிவுக்கு குறுக்காகவோ அல்லது வயலைச் சுற்றி நட்டால் மண் அரிப்பைத் தடுக்கலாம். 4. கிணற்றுக்கு அருகில் பூவரசு மரத்தை வளர்த்தால் கிணற்று நீர் ஆவியாவதைக் குறைக்கலாம். 5. கோரைப்புல்லைக் கட்டுப்படுத்த கொள்ளுப்பயிரைச் சாகுபடி செய்யலாம். 6. எருக்கு இலை மற்றும் வேப்பம்புண்ணாக்கை மண் கலத்தில் இட்டு மூழ்குமாறு நீர் ஊற்றி வயலில் வைத்தால் அந்த வாடையால் அந்திப்பூச்சிகள் கவரப்படும். 7. ஊமத்தை காயோடு, எருக்கு இலையை அரைத்து 15 நாட்கள் நீரில் ஊற வைத்து வடிகட்டி தெளித்தால் அனைத்து வகைப்பூச்சிகளையும் கட்டுப்படுத்தலாம். 8. பிரண்டையை வயலைச்சுற்றி நட்டால் கரைய...